அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது - படைப்பாளிகளை பரிந்துரையுங்கள்

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   14 , 2009  06:11:34 IST

நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டு தோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு விருதளிக்க முடிவு செய்து,2007 ஆம் ஆண்டு கண்மணி குணசேகரனுக்கும் 2008 ஆம் ஆண்டு பிரான்சிஸ் கிருபாவுக்கும் விருதுகள் வழங்கியது.

இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ முக்கியமான பங்களித்துவரும் இளம் படைப்பாளி ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அவரது பங்களிப்பு படைப்பு ரீதியில் வலுவானதாக இருப்பதுடன் , சூழலின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வண்ணம் இருத்தல் கூடுதலான தகுதியாகக் கொள்ளப்படும்.

நாற்பது வயதுக்கு உட்பட்ட தமிழ்ப் படைப்பாளிகள் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். படைப்புத் துறையில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவருபவர்களாக அவர்கள் இருப்பதும் அவசியம்.

இந்த விருதுக்குத் தகுதியான படைப்பாளிகளின் பெயர்களைப் பரிந்துரைக்குமாறு தமிழ்ப் படைப்பாளிகளையும் வாசகர்களையும் நெய்தல் அமைப்பு கேட்டுக் கொள்கிறது. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட படைப்பாளிகளையும் பரிந்துரைக்கலாம். குறிப்பிட்ட ஒரு படைப்புக்காக அல்லாமல் தொடர்ச்சியான பங்களிப்புக்காகவே இவ்விருது வழங்கப்படுகிறது.

பரிந்துரைப்போர் தங்கள் பரிந்துரைக்கான காரணங்களைச் சுருக்கமாகக் குறிப்பிடலாம். 2009 ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பரிந்துரைகளை அனுப்பிவையுங்கள். அவற்றைக் கருத்தில் கொண்டு நடுவர்கள் விருதுக்குரிய படைப்பாளியைத் தேர்ந்தெடுப்பார்கள்.

நடுவர் குழு : சுகுமாரன் , பாவண்ணன் , அரவிந்தன்

விருதில் , பாராட்டுப் பத்திரமும் 10,000 (பத்தாயிரம்) ரூபாய் ரொக்கப் பரிசும் அடங்கும்.
வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் பொதுநிகழ்ச்சி ஒன்றில் விருது வழங்கப்படும்.

தொடர்புக்கு

நெய்தல் கிருஷ்ணன்
சரவணா இல்லம்
51 , ஈத்தாமொழி சாலை
கோட்டாறு , நாகர்கோவில் 629002
கைப்பேசி : 9443153314


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...