அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கிங் ஆப் பாப் மைக்கேல் ஜாக்சன் மறைந்தார்

Posted : சனிக்கிழமை,   ஜுன்   27 , 2009  04:03:01 IST

உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களை தூக்கத்தில் ஆழ்த்திவிட்டு மைக்கேல் ஜாக்சன் மறைந்து விட்டார்.
மைக்கேல் ஜாக்ஸன் கடைசி காலகட்டம் மிக சோகமானது.அது பற்றி கிருஷ்ணா டாவின்ஸி தனது 'டாவின்ஸி பதில்கள்' பகுதியில் ,' கறுப்பினத்தவராகப் பிறந்த அவர் இளம் வயதில் பிரகாசமான கண்கள் மற்றும் முக அமைப்புடன் அழகாகவே இருந்தார். ஆனாலும் அமெரிக்க கறுப்பின மக்களின் சேரிகளில் பிறந்து வளர்ந்த அவருக்குத் தன் கறுப்பு நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மை இருந்ததுதான் பெரிய துரதிருஷ்டம். இசையுலகில் மிகப் பெரும் ஹிட்டுகளைக் கொடுத்து “கிங் •ஆப் பாப்” என்று பிரபலமடைந்தாலும் அந்தத் தாழ்வு மனப்பான்மை அவரை விட்டுப் போகவே இல்லை. தன் தோழியான நடிகை எலிஸபெத் டெய்லரின் முக அமைப்பால் கவரப்பட்டவர் அதே போல் தன் முகத்தையும் மாற்ற வேண்டும் என்று நினைத்து பல பிளாஸ்டிக் சர்ஜரிக்களை செய்து கொண்டார். செயற்கை ஆக்ஸிஜன் சிலிண்டர்களில் பல மணீநேரங்கள் செலவழித்தார். மினரல் தண்ணீரிலேயே குளித்தார். தன் நிறத்தை “மாற்றுவதற்காக” எத்தனையோ நிற மாற்ற சிகிச்சைகளை மேற்கொண்டு கண்ட கண்ட மருந்துகளை விழுங்கினார். தோலின் நிறம் மாற்றமடைந்தாலும் அதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டியிருந்தது. அவருடைய பரேஷன் செய்யப்பட்ட செயற்கை மூக்கு கழண்டு விழுந்தது. உடலின் இயல்பான நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாகக் குறைந்து இன்று கான்ஸர் நோய்க்காக சிகிச்சை அளிக்கப்படுகிறார் ஜாக்ஸன். கறுப்பு நிறமும் அழகுதான் என்பதை உணராமல், தேவையில்லாத முயற்சிகளில் தன்னை 'வெள்ளையனாக' மாற்ற நினைத்த ஜாக்ஸன் இன்று பரிதாபமாகத் தன்னுடைய கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். அவருடைய உடல் நோயைக் கூட குணப்படுத்தி விட முடியும், ஆனால் மனநோய் மிக ஆபத்தான கட்டத்துக்குச் சென்று விட்டதாகச் சொல்கிறார்கள் அவர்கள்.பாவம் மைக்கேல்!'இப்படி கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் கேரி நகரில் 1958-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி மைக்கேல் ஜாக்சன் பிறந்தார்.

ஜோசப் வால்ட்ர்- கேத்ரின் தம்பதியின் ஏழாவது குழந்தையான மைக்கேல் ஜாக்சனின் முழுப் பெயர் மைக்கேல் ஜோசப் ஜாக்சன்.தனது தந்தையால் இளம் வயதில் துன்புறுத்தப்பட்டதாக கூறியுள்ள ஜாக்சன் 1964-ல் தனது சகோதரர்கள் தொடங்கிய இசைக்குழுவில் இணைந்தார்.
முதலில் பின்னணி வாத்தியங்களை வாசிக்கும் பணியைத் தொடங்கிய ஜாக்சன் பின்னர் அதே இசைக் குழுவில் நடனம் ஆடினார்.
1966-ல் அந்த இசைக்குழுவின் பெயர் மாற்றப்பட்டது. ஜாக்சன் - 5 என்று அந்த இசைக்குழுவின் தலைமைப் பொறுப்பை ஜாக்சன் ஏற்றார்.

சிபிஎஸ் ரிகார்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் 1975-ல் ஒப்பந்தம் செய்து கொண்ட பின் ஜாக்சன் தனது உலகப் பயணத்தை துவக்கினார்.

1982-ல் வெளியான த்ரில்லர் இசை ஆல்பம் ஜாக்சனுக்குப் பெரும் புகழ் பெற்றுத் தந்தது. 1984-ம் ஆண்டில் ஜாக்சனுக்கு 8 கிராமி விருதுகள் கிடைத்தன.
1976 முதல் 84-வரை ஆறு இசை ஆல்பங்களை ஜாக்சன் வெளியிட்டார். ஆறில் 'ஆஃப் த வால்' என்ற ஆல்பம் மிகுந்த வெற்றியைப் பெற்றது.
1987-ம் ஆண்டில் 'பேட்' ஆல்பம் வெளியானது.
1991-ம் ஆண்டில் டேஞ்சரஸ் இசை ஆல்பம் வெளியானது
1995-ல் 15 பாடல்களைக் கொண்ட ஹிஸ்டரி ஆல்பம் இரண்டு தொகுதியாக வெளியிடப்பட்டது.
2001-ல் வெளியான இன்வின்சிபில் ஆல்பம் வெளியானது.

ஜாக்சனின் 50வது பிறந்த நாளில் கிங் ஆஃப் பாப் என்ற இசை ஆல்பத்தை சோனி நிறுவனம் வெளியிட்டது.

1993-ம் ஆண்டில் சிறுவனைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜாக்சன் மீது புகார் தெரிவிக்கப்பட்டு பின்னர் அது உண்மையில்லை என்று விசாரணையில் தெரியவந்து.

1993-ம் ஆண்டில் லிசா மேரி என்ற மேடைப் பாடகியை ஜாக்சன் மணந்தார். இரண்டே ஆண்டில் இந்தத் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

பின்னர் ஜாக்சன் டெபோரா என்ற நர்சை ஜாக்சன் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஓரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர். 1999-ல் டெபோராவை ஜாக்சன் விவாகரத்து செய்தார். ஆனால் குழந்தைகள் ஜாக்சன் பொறுப்பிலேயே இருந்தனர். இது தவிர வாடகைத் தாய் மூலமாக இன்னொரு மகனும் ஜாக்சனுக்கு உண்டு.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...