அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அம்பைக்கு இயல் விருது.

Posted : புதன்கிழமை,   ஜுன்   10 , 2009  02:23:14 IST

மே மாதம் 24ம் தேதி ஞாயிறு இரவு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் சீலி மண்டபத்தில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்பட்டது. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் அம்பை. இவருடைய முதல் நாவலான அந்திமாலை இளம் வயதிலேயே வெளிவந்து கலைமகள் பரிசை பெற்றுத் தந்ததோடு இவருக்கு பெரும் புகழையும் கொடுத்தது. தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர் என்று இவர் அறியப்படுகிறார்.

அம்பையின் நூல்கள்: அந்தி மாலை , சிறகுகள் முறியும் , வீட்டின் மூலையில் ஒரு சமையலறை , காட்டில் ஒரு மான் , வற்றும் ஏரியின் மீன்கள் , ஆங்கில மொழிபெயர்ப்பில் A Purple Sea , In a Forest, a Deer ஆகியவையாகும். அம்பை
SPARROW (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அம்பை அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.


இயல் விருதை தொடர்ந்து வேறு விருதுகளும் வழங்கப்பட்டன:
புனைவு இலக்கியப் பிரிவில் 'வார்ஸாவில் ஒரு கடவுள்' நாவலுக்காக தமிழவனுக்கும், அபுனைவு இலக்கியப் பிரிவில்
'இலங்கையில் தமிழர்' நூலுக்காக முனைவர் முருகர் குணசிங்கத்துக்கும், கவிதைப் பிரிவில் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதை தொகுப்புக்காக லீனா மணிமேகலைக்கும், தமிழ் தகவல் தொழில்நுட்ப சாதனைக்கான சுந்தர ராமசாமி நினைவுப் பரிசு சுரதா யாழ்வாணனுக்கும், மாணவர் புலமைப் பரிசில் அஞ்ஜெலா பிரிட்டோவுக்கும் வழங்கப்பட்டன.

இந்த விழாவுக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும், ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.

- அ.முத்துலிங்கம்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...