அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எமது தமிழ் சொந்தங்களைப் பாதுகாக்க வேண்டும் : மக்களவையில் திருமா கன்னிப்பேச்சு

Posted : புதன்கிழமை,   ஜுன்   10 , 2009  02:16:02 IST

குடியரசுத் தலைவர் உரையில் இலங்கைத் தமிழர் பிரச்னை, தனியார் துறை இட ஒதுக்கீடு உள்பட்ட சில சிக்கல்களைப் பற்றி குறிப்பிடப்படவில்லை என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மக்களவையில் தன் கன்னிப்பேச்சில் குறிப்பிட்டார்.

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரான தொல். திருமாவளவன், திங்கள் மாலை 5:45 மணியளவில் கன்னிப் பேச்சை நிகழ்த்தினார். அவர் பேசியது:தலித் மற்றும் பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்களை மக்களவையின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியாவை நான் வாழ்த்தவும் பாராட்டவும் விரும்புகிறேன். அத்துடன் இதற்கு ஆதரவளித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் என் நன்றி. இந்தக்க் காலகட்டம் எளியோரின் காலம். எளியோரை வலிமைப்படுத்துவதே தேசத்தின் உண்மையான வலிமை.
தற்போது பெண் குடியரசுத்தலைவரைப் பெற்றிருக்கிறோம். மதச் சிறுபான்மைச் சமூகங்களிலிருந்து குடியரசுத் துணைத் தலைவரையும் பிரதமரையும் பெற்றிருக்கிறோம். ஒரு தலித் சமூகத்திலிருந்து மக்களவைத் தலைவராக பெண்ணையும், பழங்குடியிச் சமூகத்தி லிருந்து மக்களவைத் துணைத் தலைவர் ஒருவரையும் நாம் பெற்றிருக்கிறோம்.

குடியரசுத் தலைவர் உரையில் பாராட்டுதலுக்குரிய பல திட்டங்கள் உள்ளன. அத்துடன் குறிப்பாக பெண் கல்விக்கான தேசிய இயக்கம், அடையாள அட்டை வழங்கும் திட்டம், குப்பம் இல்லா இந்தியா, தேசிய அளவிலான உணவு உறுதிச் சட்டம், சிறுபான்மையினருக்கான பிரதமா¢ன் 15 அம்சத் திட்டம், பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா போன்ற அறிவிப்புகள் பாராட்டுக்கு¡¢ரியவை. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர்கள் இத்தகையத் திட்டங்களைப் விளக்கிப் பாராட்டியுள்ளனர். எனவே நான் அவற்றை மேலும் விவரிக்க விரும்பவில்லை.

ஆனால் குடியரசுத்தலைவரின் உரையில் விடுபட்ட சில முக்கியமான சிக்கல்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை பற்றியும், சேது சமுத்திரத் திட்டம், தனியார்த் துறைகளில் இசுலாமியர்கள் கிறித்தவர்கள் குறிப்பாக தலித் கிறித்தவர்கள் இட ஒதுக்கீடு, பாபர் மசூதி, பல்வேறு குறைகளுடன் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, மக்களவையில் நிறைவேற்றப்படாமல் உள்ள இசுலாமியர்கள் கிறித்தவர்கள் குறிப்பாக தலித்கிறித்தவர்கள் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு, அரசு பணிகளுக்கான இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தீண்டாமை ஒழிப்பு ஆகியவை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஒவ்வொரு கிராமமும் சாதி கிராமமாகவும் தலித் கிராமமாகவும் இரட்டை குடியிருப்புகளாக இருப்பது ஒரு தேசிய அவமானம் எனக் கூறுவதற்காக வருந்துகிறேன். இங்கே தீண்டாமையை ஒழிக்காமல் சனநாயகத்தை வளர்க்க முடியாது. நாம் நமது சனநாயகத்தின் மீது நாம் அனைவரும் மிகுந்த வேட்கை கொண்டிருக்கிறோம். ஆனால் சனநாயகம் என்பது என்ன? நம்மை பொருத்தவரையில் சனநாயகம் என்பது மற்றவர்களுடைய உணர்வுகளையும் விருப்பங்களையும் மதிப்பதுடன் மற்றவர்களின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் அனுமதிப்பதும் ஆகும்.

ஆனால் நம்மிடையே இத்தகைய மனநிலை இல்லை. எமது கட்சியின் புகழ்பெற்ற முழக்கம் ஒன்று உண்டு. " கடைசி மனிதனுக்கும் சனநாயகம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்! மனிதநேயம் சனநாயகத்தின் இன்றியமையாத அடிப்படைத் தேவையாகும். சனநாயகம் சகோதரத்துவத்திற்கு வழிவகுக்கும்; சகோதரத்துவம் சுதந்தரத்தைக் கொடுக்கும்; சுதந்தரம் சமத்துவத்தை உருவாக்கும்! அனைத்திலும், அனைவருக்கும் சமத்துவம் என்பதே உண்மையான சனநாயகம் ஆகும். வாக்குரிமை மட்டுமே சனநாயகம் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

நிறைவாக நான் சில வேண்டுகோள்களை வைக்க விரும்புகிறேன். இலங்கை தமிழர் மீதான இனப்படுகொலை பற்றிய வெள்ளை அறிக்கை வேண்டும். இலங்கைத் தமிழர் சிக்கலில் இந்திய அரசின் பங்களிப்பு என்ன? இலங்கை அரசுக்கு இந்திய அரசு என்ன வகையான ஆதரவினைத் தந்தது? என இந்திய அரசு வெள்ளை அறிக்கையாக அளிக்க வேண்டும். அதைப் போலவே, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கென 'தனி அமைச்சகம்' உருவாக்க வேண்டும். மேலும் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான 'தலித் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு'வின் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும். உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி உட்பட அனைவருக்கும் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும்.

எமது கட்சியும் தோழமைக் கட்சியான திமுகவும், ஈழத்தமிழர்கள் சிக்கல் குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளன. இந்தியா, தமிழ்ச் சமூகத்திற்கு துரோகம் இழைத்து விட்டது என்பதை வருத்தத்துடன் தொ¢வித்துக்கொள்கிறேன். எனவே இந்தியா தமிழர்களுக்கு எதிரான தனது போக்கை மாற்றிக்கொண்டு எமது தமிழ்ச் சொந்தகளைப் பாதுகாக்க வேண்டும் என்று திருமா பேசினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...