அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு 0 “என்னுடைய பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் ஒன்றிய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி” -கமல்ஹாசன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழக எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் ரூ. 48 லட்சம் கொள்ளை!

Posted : புதன்கிழமை,   ஜுன்   23 , 2021  10:59:20 IST

கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில், பணம் போடும் எந்திரங்கள் வாயிலாக நூதன முறையில் பணம் திருட்டு நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் இது தொடர்பாக 19 புகார்கள் வந்துள்ளன. இதனால் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.48 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 17-ந்தேதி, 18-ந்தேதி மற்றும் 19-ந்தேதி ஆகிய 3 நாட்களில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக சென்னையில் 7 புகார்கள் வந்துள்ளன. சாதாரண வங்கி அட்டையை பயன்படுத்தி பணம் போடும் எந்திரத்தில் பலமுறை பணத்தை எடுத்துள்ளனர். இந்த நூதன திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய கொள்ளையர்கள் ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படையினர் அரியானா விரைந்தனர். இந்நிலையில் ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அரியானா மாநிலம் மேவாக் பகுதியில் தனிப்படை போலீசார் கொள்ளையனை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இதையடுத்து எஸ்.பி.ஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு, மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அனைத்து எஸ்.பி.ஐ வங்கிகளிலும் பணம் சரியாக உள்ளதா என சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...