அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   22 , 2021  19:06:38 IST

புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 987 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 837 நபர்களுக்கும், காரைக்காலில் 89 நபர்களுக்கும், ஏனாமில் 40 நபர்களுக்கும், மாஹேவில் 21 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தற்போது 5923 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 43,931 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
 
மேலும் புதுச்சேரியில் 3 பேரும் காரைக்காலில் 1 நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் மாநிலத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 726 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக மநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,580ஆக உள்ளது. முதன்முறையாக புதுச்சேரியில் 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
மேலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதுச்சேரியில் வெள்ளிகிழமை இரவு முதல் வார இறுதி நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கான ஊரடங்கு கட்டுப்பாடுகளை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இரவு ஊரடங்கு இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.
 
திங்கட்கிழமைக்கு பிறகு கடைகள், நிறுவனங்கள், வர்த்தக மையங்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும், திருமணங்களை நூறு பேரைக் கொண்டு நடத்த வேண்டும்,
இறுதி ஊர்வலத்தில் 50 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுபாடுகளையும் அரசு விதித்துள்ளது.
 
மத வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டாலும் கோயில்கள் திறந்து வழக்கமான பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், உணவு கூடங்கள் 50 சதவீத இருக்கையுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
இதே போல் மதுபான கடைகளுக்கு கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அனைத்து மதுபான கடைகளும் மதுபானம் வழங்கும் பார்கள் மற்றும் ஓட்டல்கள் 26 ஆம் தேதி முதல் மதியம் 2 மணிக்குள் மூடவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வெள்ளிகிழமை 23 ம் தேதி வார இறுதி ஊரடங்கு காரணமாக வெள்ளிகிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை மூடியிருக்க வேண்டும் என கலால் துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...