அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழ்ப்படங்களின் இந்தி டப்பிங் !- சந்தை ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறார் பிரதீப்!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   05 , 2019  14:07:53 IST


Andhimazhai Image

முன்பெல்லாம் தியேட்டர் ரைட்ஸ் மட்டும்தான் பெரிய வருமானமாக இருந்தது. அதிலும் நிச்சயமில்லாத தன்மை –எவ்வளவு கிடைக்குமோ-என்பது இருந்தது. அண்மைக் காலமாக இந்தி ரைட்சும், டிஜிட்டல் (சேட்டிலைட், அமேசான், நெட் பிளிக்ஸ்) ரைட்சும் நன்கு வியாபாரமாகிறது. கிட்டத்தட்ட 175 படங்களின் இந்தி உரிமையை வாங்கி வியாபாரம் செய்தவரும் கொலைகாரன் படத்தின் தயாரிப்பாளருமான பிரதீப் இந்தி டப்பிங் ரைட்ஸ் வாய்ப்புகளைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறார்.

 

இந்திப் பட டப்பிங்குக்கு என சப்ஜெக்ட் இருக்கிறது. பேய்க் கதை, விலங்குகள், கிராபிக்ஸ், ஆக்சன், கதைகள். எல்லாம் நன்றாகப் போகும். மொத்தத்தில் கமர்சியல் மாஸ் படங்கள் நன்றாகப் போகும். உதாரணமாக நீயா-2 இங்கே தியேட்டரில் சரியாகப் போகவில்லை. ஆனால் இந்தப்படம் கிராபிக்ஸ் எல்லாம் இருப்பதால் கண்டிப்பாக வடக்கில் நன்றாக ஓடும். முன்பெல்லாம் சிங்கிள் ஸ்கிரீன்– மிதுன், தர்மேந்திரா படங்கள் வந்தன-இப்போ எல்லாமே அங்கே மல்டிபிளக்ஸ் படமாகி விட்டது. அதனால் அவர்கள் இங்கே இருந்து எதிர்பார்ப்பது அதே மல்டிப்ளக்சை அல்ல. அவங்களுக்கு மிருகங்கள், கிராபிக்ஸ் இருக்கிற மாதிரி ஆக்சன் படம் இருந்தால் நன்றாகப் போகும். முதலில் நல்ல ஆக்சன் படங்களான அர்ஜுன், நாகார்ஜூனா படங்களுக்கு வரவேற்பு இருந்தது. பிறகு அந்நியன், டான் நம்பர் 1 நன்றாகப் போனது. மாஸ் ஆக்சன் படம்தான் நன்றாகப் போகும். இப்போது யூ-டியூப் வந்த பிறகு சின்னச் சின்ன ஊர்களில் இருப்பவர்கள் எல்லாம் இந்த மாதிரி டப்பிங் படங்களை அதிகம் பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி தரம் உயர்ந்த ஆக்சன், அரண்மனை, காஞ்சனா மாதிரி கிராபிக்ஸ் சேர்த்து அல்லது விலங்குகள், காடு இவற்றை மையமாக வைத்துப் படம் பண்ணுவது நல்லது.

 

டப்பிங் ரைட்சை வாங்குபவர்கள் முன்னரெல்லாம் பர்ஸ்ட் லுக், டைட்டில் இவற்றை வைத்து வாங்க முடிவு செய்தனர். ஆனால் அண்மைக்காலமாக இதில் கணிப்பு பொய்த்துப் போனதால் இப்போது டீசர், டிரைலர் எல்லாம் வந்த பிறகு விசுவலாகப் பார்த்து, தேறுமா? தேறாதா? என முடிவெடுகின்றனர். எனவே அதை எதிர்பார்த்து இந்திக்கு ஏற்றமாதிரி விசுவலை கட் பண்ணி டிரைலர் பண்ணுவது நல்லது. அது மீடியாவில் வந்தபிறகு பிடித்திருந்தால் ஆட்டோமேட்டிக்காக நிச்சயமாக வாங்க வருவார்கள்.

 

இந்தி மற்றும் பிற மொழிகள் என்றுதான் பெரும்பாலான படங்களுக்கு நிரந்தர உரிமைகளை விற்கின்றனர். முன்பெல்லாம் இந்தி மார்க்கெட் விஜய் போன்றவர்களுக்கு சிறியதுதான். தற்போது அவருக்கு இந்தி ரைட்ஸ் மட்டும் 13 கோடிக்குப் போகிறது. இவரைப் போன்ற ஸ்டார்களின் படங்களுக்கு மட்டும் 25 ஆண்டுகள் வரை என்று உரிமைகள் விற்கப்படுகின்றன. மற்ற படங்களின் உரிமைகள் 99 ஆண்டுகளுக்கு தரப்படுகின்றன.

 

இந்தியில் டப்பிங் வாங்குபவர்களே பிறமொழிக்கும் சேர்த்து ஒப்பந்தம் போடக் காரணம்?

 

இந்தி மற்றும் பிறமொழி என்று ஒரு கோடிக்கு வாங்கினால் பெங்காலி, போஜ்புரிக்கு ஒரு லட்சம் எனப் பேசி வாங்கிப் போய் இரண்டு அல்லது மூன்று லட்சம் செலவு செய்து அங்கே ரிலீஸ் பண்ணுவார்கள். இதற்கும் தனித்தனி ரைட்சாக விற்றால் என்ன பிரச்சினை என்றால், மராத்தி, போஜ்புரி எல்லாம் இந்தியிலிருந்து பெரிதாக வேறுபட்ட மொழிகள் இல்லை. தனித்தனி ரிலீசில் போனால் இந்தியில் ரைட்ஸ் வாங்கினவர்க்கு லாபம் குறைந்து விடும். எனவேதான் ஒரே ஆளே இந்திக்கும் பிறமொழிக்கும் என சேர்த்து வாங்கிவிட்டு உள்வாடகை மாதிரி தனித்தனியாக விற்றுக்கொள்கிறார்.

 

சின்னப் படங்களில் எது நன்றாகப் போனது?

 

டிமாண்டி காலனி நன்றாகப் போனது. முழுக்க பேய்க் கதையாக இருந்தால் நன்றாகப் போகும். ஆனால் இங்கிலீஷ் படத்தில் வருவது போல் பேய் வந்துவிட்டுப் போவதாக இருக்கக் கூடாது. காஞ்சனா மாதிரி இருக்க வேண்டும். பேயும் இருக்கவேண்டும். கிராபிக்ஸும் இருக்க வேண்டும். நீயா-2 க்கு நல்ல டி.ஆர்.பி. இங்கே வந்துள்ளது. இதே போல் இந்தியிலும் நல்ல டி.ஆர்.பி. வரும். பாம்பு வைத்துப் படம் பண்ணினால் இந்தியில் எப்போதும் நல்ல மார்க்கெட் உண்டு.

 

தமிழோடு ஒப்பிடும்போது தெலுங்குப் படங்களைத்தான் இந்திப் பட உலகம் அதிக தொகை கொடுத்து வாங்குகிறது. காரணம் தெலுங்கு படங்களில் ஹீரோ சம்பளம் குறைவு. அதனால் தயாரிப்புக்கு அதிக செலவு செய்து தரமாகத் தருகின்றனர். ஆனால் இங்கே ஹீரோ சம்பளம் அதிகமாக இருப்பதால் தயாரிப்பு செலவை சுருக்கி தரத்தில் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்கிறோம்.

 

விதிவிலக்காக விஜய், அஜித் படங்கள் அதிகமாக விற்கப்படுகின்றன. இருந்தும் தெலுங்கை ஒப்பிடுகையில் இது குறைவே.

 

நாம் செய்ய வேண்டியது இதுதான் - தமிழ்ப் படத் தயாரிப்பில் செலவை அதிகரித்து தரத்தை உயர்த்த வேண்டும். அப்படி செய்தால் ஆட்டோமேட்டிக்காக டப்பிங் வாங்க வந்து விடுவார்கள். நல்ல விலைக்கும் போகும். உள்ளடக்கம் நன்றாக இருந்தால் யூ-டியூப்பில் டிரைலர் வந்தவுடனேயே நம்மைத் தேடி வருவார்கள்.  

 

சங்குசக்கரம் என்றொரு கிராபிக்ஸ் படம் வந்தது, அது சிறுவர்களை வைத்துப் பண்ணிய படம். ரொம்ப நாள் கழித்து இம்மாதிரி படம் வந்திருந்தது. இம்மாதிரிப் படங்கள் எப்போதுமே இந்தியில் நன்கு போகும்.

 

இந்தி டப்பிங்கின் எதிர்காலம்? என்னென்ன பிரச்சினைகள் உள்ளன?

 

சொன்ன தேதியில் படத்தை முடிக்காமல் இருப்பது, ஒரு சிலர் செய்தது போல் ஒருவரிடம் மட்டுமல்லாமல் பலரிடமும் ஒரே படத்தின் உரிமையை விற்பது இவை எல்லாம் இருந்தன. இவை பாதிப்புதான். அதனால் இப்போது படம் முடியும் முன்பே ஒப்பந்தம் போடாமல் டீசர், டிரைலர் வரை காத்திருந்து உஷாராக வியாபாரம் பேசுகின்றனர்.

 

இந்தி டப்பிங், சேட்லைட் எல்லாமே படிப்படியாக விரிவாகும். அதற்கான விலையும் அதிகரிக்கும். டப்பிங்கைப் பொறுத்த மட்டும் இதில் கியாரண்டியான எதிர்காலம் உள்ளது. நல்ல படம் பண்ணினீர்கள் என்றால் 20 முதல் 25  சதவீதம் வரை இதில் எதிர்பார்க்கலாம்.

 

இந்தி டப்பிங்கை விற்கும்போது தியேட்டர் + சேட்டிலைட் என்றுதான் விற்க வேண்டுமா?

 

இந்தியைப் பொறுத்தமட்டில் இரண்டையும் சேர்த்துதான் வாங்குவர். தியேட்டரில் எல்லாப் படங்களும் போகும் எனச் சொல்ல முடியாது. இந்தியில் பிரின்ட் அண்ட் பப்ளிசிட்டிக்கு மட்டும் ஆறு அல்லது ஏழு கோடி போடவேண்டும். கே.ஜி.எப், பாகுபலி, எந்திரன் ஆகிய மூன்று படங்கள் மட்டும்தான் டப்பிங்கில் தியேட்டரில் போனது. 2.0 போகவில்லை. எனவே இதில் கியாரண்டி இல்லை என்பதால் சேட்டிலைட்டையும் சேர்த்து வாங்குகின்றனர்.

 

டப்பிங் ரைட்சை வாங்கும் முறை என்ன?

 

டீசரைப் பார்த்து படம் பிடித்து விட்டால் ஒப்பந்தம் போட்டு, அதில் 20 சதவீதத்தை அட்வான்சாகக் கொடுத்து விடுவர். ஆடியோ ரிலீசின்போது 20 சதவீதத்தைத் தருவர். மீதி  60 சதவீதத்தை ரிலீஸ் ஆனவுடன் தருவர். இதுதான் நடைமுறை.

 

டி.ஆர்.பி. வைத்துதான் ஒரு படத்தை வாங்குவார்களா?

 

 ஆம்.

 

இங்கே பாப்புலரா இருக்கும் ஆர்ட்டிஸ்ட்டுக்கு அங்கே எப்படி மார்க்கெட் இருக்கும்?

 

இங்கே ஒரு படம் ஓடும்போது டி.ஆர்.பி. ஏற ஏற அது சானலில் வரும். இதைப் பார்த்து இந்தியிலும் இது நன்றாகப் போகும் என்ற முடிவுக்கு வருவார்கள்.

 

அப்படி என்றால் சின்னப் படங்கள், உதாரணமாக தென் மேற்குப் பருவக்காற்று இங்கே நன்கு ஓடினால் அதையும் அங்கே வாங்க மார்க்கெட் உள்ளதாஅந்தப் படத்தின் உள்ளடக்கத்துக்கு அங்கே மார்க்கெட் நிச்சயமாகக் கிடையாது. அப்படி என்றால் எப்படிப்பட்ட கதையை வாங்குவார்கள்?

 

சமையல் பண்ணிக்கொண்டே ஹாலுக்கு வந்து எட்டிப்பார்த்தபடி படத்தை வாட்ச் பண்ணும் லேடிஸ்தான் ஆடியன்ஸ். டி.வி.யில் உங்கள் படத்தைப் போட வேண்டும் என்றால் சீன் மாறினாலும் கதை கன்டினியுட்டி போய்விடக் கூடாது. அடுப்படிக்குப் போய்விட்டு திரும்பினால் கதையே மாறியிருக்கும் – திரில்லர் படங்களையும் இந்தி சேட்லைட்டில் விரும்ப மாட்டார்கள். எல்லாப் பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்க வேண்டும். டைம் பாஸ் இருக்க வேண்டும். கதையை பின் தொடரும் வகையில் இருக்க வேண்டும் என்ற விசயங்கள் எல்லாம் தீர்மானிக்கும்.

 

யுத்தப்படங்கள், குறிப்பாக எல்லையில் போர் குறித்த டப்பிங் படங்கள் இந்தியில் போவதில்லை. அதே நேரத்தில் பெண் போலிஸ் கதை – ஆனால்-ஆக்சன் உள்ள கதைக்கு மார்க்கெட் உண்டு. அண்மையில் லட்சுமிராய் நடித்த கன்னடப் படம் வந்துள்ளது. பெண் போலீஸ் கதை இது. பைட் உள்ளதால் இது இந்தியில் நன்கு போகும்.

 

லேடி இருந்தால் ஆக்சன் இருக்கணும். அல்லது கிராபிக்ஸ் வேண்டும். உதாரணம் அருந்ததி படம்.

 

டைரக்டருக்கு என்றும் டப்பிங் உலகில் மார்க்கெட் உள்ளது. ஷங்கர், முருகதாஸ், அட்லி ஆகியோரின் படங்களுக்கு தனி வேல்யூ உள்ளது.

 

காக்கா முட்டை படத்தை டப்பிங் வாங்குவாங்களா?

 

இல்லை. காக்கா முட்டை மாதிரியான படங்கள் ரீமேக்குக்கு சரியாக வரும். டப்பிங்கில் சிறுவர் படம் என்றால் கிராபிக்ஸ் இருந்தால்தான் போகும்.

 

பாலிவுட் நடிகர்களை வைத்துப் பண்ணினால் டப்பிங்கில் உடனே போகுமா?

 

அது கொஞ்சம் உதவலாம். உடனே விற்க அது பத்து சதவீதம் உதவக் கூடும்.

 

குறும்படம் டப்பிங்கிற்கு போகுமா?

 

போகாது. இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் இருக்கவேண்டும். ஏனென்றால் டப்பிங் பண்ணி டிவியில் போடும்போது பாட்டுகளை வெட்டுவார்கள். அப்படி செய்யும்போது ரொம்பவும் படம் சின்னதாக ஆகிவிடக் கூடாது.

 

ஆனால் இத்தனை மணி நேரம் படம் இருந்தாக வேண்டும் என்று கட்டாயவிதி ஏதும் இல்லை. உள்ளடக்கம் சிறப்பாக இருந்தால் ஒன்றரை மணி நேரப் படமாக இருந்தாலும் டப்பிங் வாங்கி விடுவார்கள்.

 

இன்டியானா ஜோன்ஸ் மாதிரியான படங்கள், ரகசியத்தை தேடிப் போவது, புதையலைத் தேடும் கதை, அட்வெஞ்சர்-கம்ப்யூட்டர் கிராபிக்சோடு - இவற்றுக்கெல்லாம் இந்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கவுதம் கார்த்திக் நடித்த இந்திரஜித் இங்கே நன்றாகப் போகவில்லை. ஆனால் இந்தியில் நன்றாகப் போனது.

 

வரலாற்றுப் படம் – ஆனால் கமர்சியலாகவும் இருந்தால் நல்ல வரவேற்பு உள்ளது.

 

மரகத நாணயம், ஜாக்பாட் போன்ற புதையல் தேடும் கதைகளுக்கும் வரவேற்பு உள்ளது.

 

டப்பிங் – ஒப்பந்த முறையில் ஒன்றரை லட்சம் முதல் பத்து லட்சம் வரை செலவு செய்து பண்ணுகின்றனர். மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் படங்களில் ஹீரோவுக்கு யார் குரல் தருவது என்பது அதன் பட்ஜெட்டைத் தீர்மானிக்கிறது. தமிழில் டப் ஆகும் படங்களுக்கு ஹீரோ குரலை சேகர் என்பவர் செய்கிறார். அவரின் சம்பளம், ஒன்றரை லட்சம். வேறு ஆளைப் போட்டால் சம்பளம் குறையும்.

 

ரீமேக் வணிகம் எல்லாம் எப்படி நடக்கிறது?

 

படம் ஹிட் ஆகிவிட்டதென்றால் அது எப்படியும் செய்தி ஊடகம் மூலம் அங்கே தெரிந்து விடும். நாலைந்து பேர் கியூப் மூலமோ அல்லது தியேட்டரிலோ படத்தைப் பார்ப்பார்கள். அவர்களுக்கு பெரிய ஹீரோ வைக்க முடிந்தால், படம் பிடித்திருந்தால் அவர்களே முயன்று ரீமேக் உரிமையை வாங்கிக் கொள்வார்கள்.

 

படம் சிறப்பாக இருந்தால் டப்பிங் போனாலும் ரீமேக்கும் போகும். சிறுத்தை, சிங்கம் ஆகிய படங்கள் அப்படித்தான் போனது.   

 

நாங்கள் தனித்தனியாக விற்பதில்லை. பேக்கேஜாக 25 படங்களை விற்றோம்.

 

 டப்பிங் உரிமையை விற்கும்போது தமிழை விட தெலுங்குக்கு அதிக விலை கிடைப்பது ஏன்?

 

தெலுங்குப் படங்களில் ஹீரோ சம்பளம் குறைவாகவும், புரொடக்சன் வேல்யூ அதிகமாகவும் இருக்கிறது. இதனால் படத்தின் தரம் சிறப்பாக உள்ளது. இதனால் அதற்கு உரிய விலை கிடைக்கிறது. தமிழில் ஹீரோ சம்பளம் அதிகம். புரடக்சன் வேல்யூ குறைவு. அதனால் அதன் தரம் குறைகிறது, அதற்குத் தக்கபடி குறைந்த விலை கிடைக்கிறது.

 

 மேலும் சில தகவல்கள்?

 

* மாஸ் ஹீரோவின் சில படங்களை அதிக விலை கொடுத்து டப்பிங் உரிமை வாங்கியிருப்பார்கள். அவற்றை விற்கும்போது அந்த விலைக்குப் போகாது. எனவே என்ன செய்வார்கள் என்றால் அதே ஹீரோவின் ஏனைய சில படங்களை இதோடு சேர்த்து ஒரு பேக்கேஜாக விற்றுவிடுவார்கள். இதில் நட்டமில்லாமல் கணிசமாக லாபமும் கிடைத்து விடும். 

 

* ஏ சர்ட்டிபிகேட் வாங்கிய படங்களை டப் / ரீமேக் செய்வது சிரமம். காரணம், டி.வி.யில் ஏ படங்களை வாங்குவதில்லை. அதேபோல் வசனத்தை மையமாகக் கொண்ட படங்களுக்கு டப்பிங் மார்க்கெட் இல்லை.

 

* லட்சுமிராய் நடித்த ஜான்சி ராணி படத்தில் லேடி பைட் சீன் பத்து நிமிடம் வரை வருகிறது. இது நிச்சயம் இந்தியில் நன்கு போகும். இது போன்ற படங்களுக்கு டப்பிங் விலை ஒன்றரை கோடி.

 

- கற்பகவிநாயகம்

 

(BOFTA  திரைப்படக் கல்லூரி நடத்திய திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் தயாரிப்பாளருமான இயக்குநருமான கண்ணன் நிகழ்த்திய உரையிலிருந்து)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...