அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு 0 “என்னுடைய பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் ஒன்றிய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி” -கமல்ஹாசன் 0 இரண்டாவது டி20: இந்திய அணி பேட்டிங்! 0 இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் நேரம் 1 நிமிடமாக அதிகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சோதனை சாவடியில் போலீஸ் தாக்கி வியாபாரி பலி!

Posted : புதன்கிழமை,   ஜுன்   23 , 2021  18:02:54 IST

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த சேலம், ஈரோடு, கோவை,உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அரசு டாஸ்மாக் கடையை தமிழக அரசு திறந்துள்ளது. இதனிடையே மதுபிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை கிராமத்திற்கு சென்று மது அருந்தி விட்டு பின்னர் கல்வராயன்மலை வழியாக வீடு திரும்பியுள்ளனர்.
 
அப்போது ஏத்தாப்பூர் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் வந்தவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் குடிபோதையில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதில் வாக்குவாதம் அதிகரிக்கவே எஸ்.ஐ  மற்றும் உடனிருந்த போலீசார் குடிபோதையில் இருந்த இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த வியாபாரி முருகேசன் என்பவரை பிரம்பால் தாக்கியுள்ளனர். அதில் முருகேசன் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைதொடர்ந்து முருகேசனை போலீசார் பிரம்பால் தாக்குவதை சக நண்பர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். தற்போது போலீசார் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
 
இந்த நிலையில் போலீசார் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்த முருகேசனை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்  சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...