அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஆடம்பர காரை விற்று கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை: நெகிழ வைக்கும் ‘ஆக்ஸிஜன் மனிதன்’!

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   22 , 2021  18:55:17 IST


Andhimazhai Image
மும்பையில் வசிக்கும் ஷாநவாஸ் ஷேக் தனது ரூ22 லட்சம் பெறுமான எஸ்.யு.வி. ஆடம்பரக் காரை விற்று ஆக்ஸிஜன்களை வாங்கி கோவிட் நோயாளிகள் அழைப்புக்கு உதவி வருகிறார்.
 
இவரது குழுவினர் மூலம் கட்டுப்பாட்டு அறை ஒன்றையே நிர்மாணித்து தொலைபேசி அழைப்புக்கு ஏற்றவாறு பிராணவாயு சிலிண்டர்களை சப்ளை செய்து உதவி வருகின்றனர்.
 
தனது ஃபோர்டு எண்டவர் காரை விற்று ஷாநவாஸ் 160 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கியுள்ளார். இதனை தேவையுள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
 
கடந்த ஆண்டும் ஏழை மக்களுக்கு உதவியதால் தன்னிடம் தற்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது என்றும் இதனால் தன் காரை விற்று சேவை செய்ய முடிவெடுத்ததாகவும் ஷாநவாஸ் கூறுகிறார்.
 
ஊடகம் ஒன்றில் பேசிய ஷாநவாஸ், தன் நண்பரின் மனைவி ஆக்ஸிஜன் இல்லாமல் ஆட்டோவிலேயே மரணமடைந்தது தன்னை புரட்டிப் போட்டு விட்டது என்றார். மக்களுக்கு குறித்த நேரத்தில் உதவ ஹெல்ப்லைன் எண்களையும் உருவாக்கியுள்ளார் ஷாநவாஸ்.
 
கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு இல்லை என்று கூறும் ஷாநவாஸ் ஜனவரியில் மட்டும் தனக்கு 50 அழைப்புகள் ஆக்சிஜன் கோரி வந்ததாகவும் தற்போது 500-600 அழைப்புகள் ஆக்ஸிஜன் கோரி தனக்கு வருவதாக தெரிவிக்கிறார்.
 
இவரது டீம் 4000த்துக்கும் அதிகமானோருக்கு உதவி புரிந்துள்ளனர். மேலும் நோயாளிகளிடத்தில் சிலிண்டரை எப்படி பயன்படுத்துவது என்பதையும் இவரது குழுவினர் விளக்குகின்றனர். பயன்பாட்டுக்குப் பிறகு மக்கள் காலி சிலிண்டர்களை ஷாநவாஸின் கட்டுப்பாட்டு அறைக்கு திருப்பி கொடுத்து விடுகின்றனர்.
 
மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பு, மரண எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது. சமீபத்தில் நாசிக்கில் மருத்துவமனை ஆக்ஸிஜன் தொட்டியிலிருந்து ஆக்சிஜன் கசிந்ததில் 22க்கும் அதிகமானோர் பரிதாபமாக பலியாகினர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...