அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

முன்பதிவில் சாதனை படைத்த ஓலா மின்சார ஸ்கூட்டர்!

Posted : சனிக்கிழமை,   ஜுலை   17 , 2021  17:46:12 IST

முதல் நாளிலேயே அதிகம் முன்பதிவு செய்யப்பட்ட சாதனையை ஓலா மின்சார  ஸ்கூட்டர் படைத்துள்ளதாக  ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.


மின்னேற்றி மூலம் சார்ஜ் செய்யப்பட்டு இயக்கப்படும் ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஓலா மின்சார ஸ்கூட்டரை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.


விருப்பமுள்ளவர்கள் நிறுவனத்தின் வலைத்தளத்தில் ரூ. 499 செலுத்தி முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தொகையை முழுவதையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும், வரும்  வாரங்களில் அதாவது இந்த மாதத்திலேயே ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஓலா நிறுவனம் கூறியுள்ளது.


இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பவிஷ் அகர்வால்  கூறுகையில், "எங்கள் நிறுவனத்தின் முதல் மின்சார வாகனத்திற்கு கிடைத்த  வரவேற்பை நினைத்தால் சிலிர்ப்பாக உள்ளது. ஓலா மின்சார  ஸ்கூட்டருக்கு ஏற்பட்ட தேவையின் மூலம் மக்களின் விருப்பம் மின்சார வாகனங்களை நோக்கி நகர்வது தெரியவந்துள்ளது.


சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உலகை மாற்ற இது பெரும் முன்னெடுப்பு.  முன்பதிவு செய்த அனைவருக்கும் நன்றி. இது தொடக்கம்தான்" என்றார்.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...