அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மருத்துவருக்கு பளார் விட்ட செவிலியர்!

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   28 , 2021  13:04:02 IST


Andhimazhai Image

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கூட, 60 மருத்துவர்கள் நடனமாடிய வீடியோ ஒன்று வைரலாகியது.

வடமாநிலங்களில் நிலைமை மிக மோசம். கொத்துக்கொத்தாக பிணங்கள் எரிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு வெளியே ஆக்சிஜன் அளிக்கப்படும் அளவிற்கு பெரும் நெருக்கடி நிலை உள்ளது. கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன், மருந்துகள், ஆட்கள் தட்டுப்பாடு பரவலாக உள்ளது.

இந்நிலையில் தான், உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியர் மற்றும் மருத்துவர் இடையே ஏற்பட்ட கைக்கலப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும்  தற்போது வைரலாகியுள்ளது.

கொரோனா தொற்றால் இறந்த ஒருவரின் இறப்பு சான்றிதழை அவரின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து செவிலியர் ஒருவர் மருத்துவரிடம் சென்று, இறப்பு சான்றிதழைக் கேட்டுள்ளார். இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு கடிதம் ஒன்றை எழுதி கொடுக்குமாறு மருத்துவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவருக்கும் செவிலியருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செவிலியர் மருத்துவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் செவிலியரை நோக்கி மருத்துவர் அடிக்க முற்பட்டார். இதனையடுத்து சுற்றியிருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவர் மற்றும் செவிலியரிடம் விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ராம்ஜி மிர்ஷா, பெருந்தொற்று காலத்தில் வேலையின் மீது ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாகவே அசம்பாவிதம் நேரிட்டதாக விளக்கமளித்துள்ளார்.

நாடெங்கும் சுகாதாரத் துறை ஊழியர்கள் பெரும் அழுத்தத்தை சந்திப்பதை பொதுமக்களும் உணர்ந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

 

-பிரகாஷ்


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...