அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம்

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   24 , 2020  12:44:43 IST

ரயிலில் செல்லும் பயணிகளின் உடைமைகளை அவர்களது வீட்டிற்கே கொண்டு சென்று சேர்க்கவும், வீட்டிலிருந்து ரயில் நிலையத்திற்கு எடுத்து வரவும் ’பேக்ஸ் ஆன் வீல்ஸ்’ திட்டத்தை வடக்கு ரயில்வே தொடங்கவுள்ளது.
 
வடக்கு ரயில்வேயின் டெல்லிக் கோட்டம் நேற்று அறிவித்த இந்த திட்டம் செயலி (BOW app) அடிப்படையில் செயல்படவுள்ளது. முதற்கட்டமாக புதுடெல்லி, டெல்லி ஜங்ஷன், ஹஸ்ரத் நிஜாமுதீன், டெல்லி கன்டோன்மென்ட், டெல்லி சராய் ரோகில்லா, காசியாபாத், குருகிராம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த சேவை தொடங்குகிறது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, ‘ரயிலில் தனியாக பயணிக்கும் முதியோர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும்.  லக்கேஜின் எடை , எண்ணிக்கை, மற்றும் தூரம் இவற்றின் அடிப்படையில் குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்படும்.’ என கூறியுள்ளனர்.

இதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்ட நிலையில் வெகு விரைவில் குறிப்பிட்ட நிலையங்களில் இந்த சேவை ஆரம்பமாகவுள்ளது. தேவையை பொறுத்து இந்தத் திட்டம் வெகு விரைவில் நாடு முழுவதும் விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...