அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு 0 “என்னுடைய பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் ஒன்றிய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி” -கமல்ஹாசன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி ரெய்டு!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   22 , 2021  10:11:59 IST

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் செந்தில் பாலாஜியிடம் தோல்வி அடைந்தார்.
 
எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதாகவும் வந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
அதன்படி கரூர் மற்றும் சென்னையில் உள்ள அவரின் வீடு, நிறுவனங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள் என மொத்தமாக 21 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில் 20 இடங்கள் கரூரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எண்-05- சாய் கிருபா அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சர் M.R.விஜய பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை DSP ராமச்சந்திரன் தலைமையில் மூன்று யூனிட்கள் ரெய்டு நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெறும் நிலையில் அவர் சென்னையில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதால் கரூர் ஆண்டான்கோயில் பகுதியில் உள்ள அவரது வீட்டில் 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...