அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்

Posted : புதன்கிழமை,   ஜுன்   23 , 2021  18:00:50 IST

இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசை, ஒன்றிய அரசு என கூறவது ஏன் என முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என கோரினார்.
 
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “ஒன்றிய அரசு என கூறுவதை குற்றமாக கருத வேண்டாம், நமது அரசியல் சாசன சட்டத்தில் கூறப்பட்டதை தான் நாங்கள் சொல்கிறோம். சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை.
 
அண்ணா, கலைஞர் கூறாததை நாங்கள் சொல்வதாக விமர்சிக்கின்றனர். 1963ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா இதுபற்றி பேசியிருக்கிறார். ஒன்றியம் என்ற வார்த்தையை பார்த்து யாரும் மிரள தேவையில்லை. இதை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்துவோம். இது கூட்டாட்சி தத்துவத்தை பிரதிபலிப்பது” என்று கூறினார்.
 
அப்போது, இந்தியாவில் இருந்து பிரிந்தது தான் மாநிலங்கள் என நயினார் நாகேந்திரன் கூறியதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்தியாவில் இருந்து மாநிலங்கள் பிறியவில்லை. எல்லோரும் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் இந்தியா என விளக்கமளித்தார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...