அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

காவலர் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மு.க.ஸ்டாலின் விளக்கம்

Posted : புதன்கிழமை,   ஜுன்   23 , 2021  18:23:55 IST

சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஏத்தாப்பூர் அருகே பாப்பநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் வந்த நபரை போலீசார் தாக்கியதில் முருகேசன் என்பவர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதோடு, வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றார்.
 
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த செய்தி தன் கவனத்திற்கு வந்தவுடன், உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். நேற்று மாலை முருகேசன் இருசக்கர வாகனத்தில் வந்த போது அங்கிருந்த காவலர்கள் தணிக்கை செய்ததாகவும், அப்போது அவர் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். அதனால் காவலர் முருகேசனை தாக்கியுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
 
இந்நிலையில், இன்று காலை மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது, முருகேசன் இறந்துவிட்டார். இதுதொடர்பான விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பதிலளித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...