அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு 0 “என்னுடைய பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் ஒன்றிய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி” -கமல்ஹாசன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை: அமைச்சர் மா.சுப்ரமணியன்

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   22 , 2021  10:20:32 IST

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை சந்தித்து மத்தியப்பிரதேச மருத்துவ கல்வி அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார்.
 
அதன்பிறகு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள், விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அவர் குறிப்பிட்டார்.
 
இதனிடையே, புனேவில் இருந்து 5 லட்சத்து 42 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்தன. அவற்றை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு சென்ற அதிகாரிகள், தேவைப்படும் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைத்தனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...