அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மே   09 , 2021  12:30:01 IST

 
குமுதம் நிறுவனர் மற்றும் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களின் மனைவியும் குமுதம் இயக்குநர்களில் ஒருவருமாக இருந்த  திருமதி.கோதை அண்ணாமலை இன்று காலை சென்னையில்  காலமானார். அவருக்கு வயது 92. கடந்த ஒரு வாரமாய் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்
 
1947ஆம் வருடம்  அவரது கணவர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை ஆசிரியராக இருந்து  நிறுவிய குமுதம் இதழின் வளர்ச்சிக்கு ஆரம்பக் காலங்களிலிருந்து இறுதிவரை  உறுதுணையாக இருந்தவர். எழுத்தின் மீதும் வாசிப்பின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.  
 
1994ல் எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் டாக்டர் எஸ்.ஏ.பி.ஜவஹர் பழனியப்பன் குமுதம் இதழுக்கு பொறுப்பேற்றார். அவருக்கும் குமுதம் ஆசிரியர் குழுவுக்கும் தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கி வந்தவர் திருமதி. கோதை ஆச்சி என்பது குறிப்பிடத்தக்கது.  
 
திருமதி கோதை ஆச்சிக்கு ஒரு மகன். இரண்டு மகள்கள்.  
 
கோதை ஆச்சியின் மகன் டாக்டர் எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவில் பிரபலமான இதய நோய் சிகிச்சை  மருத்துவராக இருக்கிறார். தந்தையின் கனவுகள் மெய்ப்பட குமுதம் பணிகளையும் அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார், 
 
மகள் விஜயலட்சுமி அழகப்பன் மைசூரில் வசிக்கிறார். 
 
மற்றொரு மகள் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான  கிருஷ்ணா சிதம்பரம் சென்னையில் வசிக்கிறார். 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...