அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு 0 “என்னுடைய பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் ஒன்றிய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி” -கமல்ஹாசன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

"பெகாசஸ் உளவு விவகாரம்: அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்": கே.எஸ். அழகிரி

Posted : புதன்கிழமை,   ஜுலை   21 , 2021  13:49:17 IST

இஸ்ரேல் நாட்டு நிறுவனம் உருவாக்கிய ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள், மூலம் 50 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட தனிநபர்களின் செல்போன் எண்கள் உளவுபார்க்கபட்டதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலில், 189 பத்திரிகையாளர்கள், 600-க்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், 65 தொழிலதிபர்கள், 85 மனித உரிமை இயக்கவாதிகள், பல்வேறு நாட்டு தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 
இந்நிலையில் பெகாசஸ் உளவு விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலிறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, “இந்தியாவில் இஸ்ரேல் உளவு பார்த்த விவகாரத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும். ஒட்டுக்கேட்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த உளவு விவகாரம் தொடர்பாக நீதிபதியை நியமித்து சுப்ரீம்கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்” என்று அவர் தெரிவித்தார். 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...