அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஐ.பி.எல் கவுண்ட் டவுன் – 5 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   06 , 2018  19:46:35 IST


Andhimazhai Image

.பி.எல் தொடரில் விளையாடும் முக்கியமான அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஒன்று. அணியின் உரிமையாளர் பாலிவுட் பாதுஷா ஷாருக் கான். இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்.

 

நிதாஸ் கோப்பை இறுதிப்போட்டியில் கடைசிப் பந்தில் சிக்ஸர்  அடித்து ஹீரோவான தினேஷ் கார்த்திக்தான் இந்த முறை கொல்கத்தா அணியின் கேப்டன். பதினான்கு வருடங்களாக கிரிக்கெட் விளையாடிவரும் தினேஷ் கார்த்திக்கு இந்த வருடம் ரொம்பவே ஸ்பெஷல். இந்திய அணியில் அவருக்கு ஒரு நிலையான இடம் கிடைக்கும் என நம்பலாம். ஆனாலும் இந்த ஐ.பி.எல் தொடரில் அவர் உயிருக்கும் மேலான ஒன்றை கொடுத்து விளையாட வேண்டும். கோப்பையை வெல்லப் போராட வேண்டும். இந்தப் போட்டி அவரது கிரிக்கெட் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகிற ஒன்று என்பது மிகையல்ல. ஏனெனில் கொல்கத்தாவை வழிநடத்திய கௌதம் கம்பீர் அணியில் தொடரவில்லை. இந்த சீசனில் அவர் டெல்லிக்காக ஆடவுள்ளார். கம்பீரின் தலைமையில் கொல்கத்தா அணி இரண்டு முறை கோப்பையை வென்றிருக்கிறது என்றாலும் ஏனோ அவர் ஏலத்தில் தக்கவைக்கப்படவில்லை. கௌதம் கம்பீரின் கம்பீரமான வெற்றிடத்தை தினேஷ் கார்த்திக் கச்சிதமாக நிரப்ப வேண்டும். அணியின் பயிற்சியாளர் முன்னாள் கொல்கத்தா ஐ.பி.எல் வீரர் ஜாக் காலிஸ். அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஜிம்பாப்வே முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹீத் ஸ்ட்ரீக்.

 

கொல்கத்தா அணியின் பலமாக வலிமையான பேட்டிங்குக்கு கூடுதல் பலம் சேர்ப்பது சிக்கனமாகப் பந்து வீசக்கூடிய சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன்தான். ஐசிசி நரேனுக்கு பந்து வீச்சு முறையில் சந்தேகம் உள்ளதாக பரிசோதனைக்கு அனுப்பிய போது கொல்கத்தா அணியும் அணி நிர்வாகமும் அவருக்கு பெரும் பலமாக இருந்தார்கள். நரேன் அந்தளவுக்கு முக்கியமான வீரர். அவரை தொடக்க வீரராகக் கூட களமிறக்கி பரிசோதித்துப் பார்த்திருக்கிறது அணி நிர்வாகம். ஏற்கனவே காயத்தால் வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விலகியுள்ள நிலையில் அணிக்கு தேர்வாகியுள்ள அதிரடி ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின், ஆந்த்ரே ரஸ்செல் ஆகியோரைத்தான் கொல்கத்தா பெரிதும் நம்பியுள்ளது. கொல்கத்தா அணியால் 9.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட அதிரடி ஆட்டக்க்காரர் கிறிஸ் லின்னுக்கு இது ஐந்தாவது ஐ.பி.எல் சீசனாகும். கடந்த சீசனில் ஏழு போட்டிகளில் 295 ரன்கள் குவித்தார் லின்.அவரது ஸ்ட்ரைக் ரேட் 180.98 ஆகும். ரோபின் உத்தப்பாவின் [ஸ்ட்ரைக் ரேட்134.7], ஆந்ரே ரஸ்ல் அதிரடியும் சேர்ந்தால் கொல்கத்தா அணி எதிரணியை நிச்சயம் பந்தாடிவிடும் என நம்பலாம். வினய் குமார், மிட்சல் ஜான்சன் வேகப்பந்து கூட்டணியும், குல்தீப் யாதவ்- சுனில் நரேன் – பியுஷ் சாவ்லா சுழற்பந்து கூட்டணியும் இந்த ஐபிஎல்லில் பல சாதனைகளை நிகழ்த்தக்கூடும்.

 

கொல்கத்தா அணி ஐ.பி.எல். போட்டியில் 63 சதவீதம் வெற்றியை உள்ளூரில்தான் பெற்றிருக்கிறது. அவர்கள் பலம் அதுதான். அதுவே அவர்களது பலவீனமும். கொல்கத்தாவுக்கு வெளியே ஆடிய ஆட்டங்களில் அவர்களது வெற்றிவிகிதம் 35 சதவீதம். எனவே அதில்தான் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என நம்புவோம்.  

 

ஆஸ்திரேலியாவில் நடந்த ஜூனியர் உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய  சுப்மான் கில், நாகர்கோட்டி, ஷிவம் மாவி ஆகியோர் கொல்கத்தா அணிக்கு விளையாட உள்ளார்கள். இந்த இளம் வீரர்களை தினேஷ் கார்த்திக்கும், அணி நிர்வாகமும் எப்படி சரியாக பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 

[கவுண்ட் டவுன் தொடரும்..]



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...