அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு 0 “என்னுடைய பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் ஒன்றிய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி” -கமல்ஹாசன் 0 இரண்டாவது டி20: இந்திய அணி பேட்டிங்! 0 இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் நேரம் 1 நிமிடமாக அதிகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு வேகம் எடுக்கும்!

Posted : சனிக்கிழமை,   ஜுலை   17 , 2021  11:12:19 IST

நாட்டின் பொருளாதாரம் வரும் 2023-ஆம் நிதியாண்டு முதல் வேகமெடுக்கத் தொடங்கும் என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பேசியதாவது, கொரோனா தொற்றுக்கு எதிரான பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கொரோனாவுக்கான தடுப்பூசி திட்டமும் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா இரண்டாவது அலை எதிர்பார்த்த அளவுக்குப் பொருளாதாரத்தில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

மத்திய அரசின் பல்வேறு சீர்திருத்த முயற்சி மற்றும் தடுப்பூசி திட்டம் ஆகியவை ஒருங்கிணைந்து பொருளாதாரத்தில் நல்ல பயனை விளைவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த 2020-21 நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.3 சதவீத பின்னடைவைக் கண்டது. இந்த நிலையில், அரசின் சீரிய நடவடிக்கைகளின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வரும் 2022-23-ஆம் நிதியாண்டிலிருந்து வேகமெடுக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்தியப் பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீத வளர்ச்சியைக் காணும் என்றார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...