அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கொரோனா நெருக்கடியிலும் அதிகரித்து வரும் ஜிஎஸ்டி வருவாய்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   02 , 2021  10:17:49 IST

கடந்த மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.23 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2021, மார்ச் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1.23 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. தொடர்ந்து 6-வது மாதமாக ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக வசூலாகி வருகிறது.

இதன் மூலம் நாட்டின் பொருளாதாரச் சூழல் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டு விரைவாக மீட்சி நிலையை நோக்கி வருவது தெளிவாகிறது. போலி பில்கள், பல்வேறு இடங்களில் புள்ளிவிவரங்களை ஆழமாக ஆய்வு செய்தல், வருமான வரித்துறை, சுங்கத்துறை இணைந்த திறமையான வரி வசூல் ஆகியவற்றால் கடந்த சில மாதங்களாக வரி வருவாய் அதிகரித்து வருகிறது.

மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரியாக ரூ.1 லட்சத்து 23 லட்சத்து 902 கோடி வசூலானது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரியாக ரூ.22 ஆயிரத்து 973 கோடியும், மாநில ஜிஎஸ்டி வரியாக ரூ.29 ஆயிரத்து 329 கோடியும் வசூலானது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியாக ரூ.62 ஆயிரத்து 842 கோடியும் வசூலானது. செஸ் வரியாக ரூ.8 ஆயிரத்து 757 கோடி வசூலானது.

ஜிஎஸ்டி வரி 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபின், கடந்த மார்ச் மாதம் வசூலான தொகைதான் அதிகபட்சமாகும். கடந்த 5 மாதங்களாக ஜிஎஸ்டி வரி தொடர்ந்து ஒரு லட்சம் கோடியைக் கடந்து வருவது பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதையே காட்டுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வசூலான ஜிஎஸ்டி வரியை விடக் கடந்த மாதம் வசூலான தொகை 27 சதவீதம் அதிகமாகும்"  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...