அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நாந்தாம்மா மு.க.ஸ்டாலின் பேசுறேன்!... முதல்வர் நீட்டிய உதவிக்கரம்!

Posted : சனிக்கிழமை,   மே   15 , 2021  14:10:40 IST


Andhimazhai Image

சென்னை வானகரத்தைச் சேர்ந்த அர்ச்சனா பத்மாகர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் மாமியாருக்கு உதவி வேண்டி 104 எண்ணுக்குத் தொடர்புகொண்டார். அப்போது இரவு பதினொரு மணியைக் கடந்திருந்தது. போனை எடுத்த குரல் நான் முக ஸ்டாலின் பேசுறேன். என்ன உதவி வேண்டும் என்றபோது அவரால் நம்பவோ புரிந்துகொள்ளவோ முடியவில்லை.

 
நேற்றிரவு சென்னை டிஎம் எஸ் வளாகத்தில் கொரோனா சிகிச்சை தொடர்பாக இயங்கி வரும் ஒருங்கிணைந்த கட்டளை மையத்திற்கு திடீரென சென்ற முதல்வர் ஸ்டாலின், கண்காணிப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் கேட்டறிந்தார். அப்போதுதான் 104 எண்ணிற்கு வானகரம் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா பத்மாகர், 78 வயதான தனது உறவினருக்கு படுக்கை வசதி கேட்டு அழைத்துள்ளார். மறுமுனையில் அழைப்பை ஏற்றுக் கோரிக்கையை கேட்ட முதல்வர் ஸ்டாலின், உடனடியாக அவருக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கை வழங்க உத்தரவிட்டார்.


இது குறித்து அர்ச்சனா பத்மக்கர் கூறுகையில், “படுக்கை வசதி கேட்டு ஆன்லைனில் கிடைத்த எண்களுக்கு எல்லாம் தொடர்பு கொண்டு பேசினேன். 104-க்கு கால் செய்த போதும் எனக்கு எந்த  நம்பிக்கையும் இல்லை.


போனில் பேசும்போது முதல்வர் தன்னை இரண்டு முறை அறிமுகப்படுத்தியிருந்தாலும், என்னால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. என்னை அமைதியாக இருக்கும் படி கூறியவர், ஒரு படுக்கை ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.” என்றவர், ஹெல்ப்லைன் ஊழியர்கள் தான் பின்னர் தன்னிடம் பேசியவர் முதல்வர் என்று தெரிவித்ததாகக் கூறினார்.


“உடனே முதல்வரிடம் பேச வேண்டும் என ஹெல்ப்லைன் ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டு, மீண்டும் போன் செய்து அவருக்கு நன்றி தெரிவித்தேன்” என்றார் அர்ச்சனா.


தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், சில  உடனடி நடவடிக்கைகளை எடுத்து மக்கள் மனதை கவர்ந்துவருகிறார்.  அந்தவகையில், திருவள்ளூரைச் சேர்ந்த பாலாஜி பாலன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட தன் குழந்தைக்கு மருந்து வாங்க நேற்று (மே-14) சென்றுள்ளார். அப்போது அவரைப் பிடித்த காவல்துறையினர் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி 500 ரூபாயை அவரிடம் அபராதமாக வசூலித்துள்ளனர்.


இதனால் மனமுடைந்து போன பாலாஜி பாலன் தனது ட்விட்டர் பக்கத்தில், முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்து, “எந்த ஆட்சி வந்தாலும் போலீஸ் குணம் மாறாது. வேலை வெட்டி இல்லாத இந்தநாளுல குடும்பம் நடத்துவது எவ்ளோ கஷ்டம். மனநலம் பாதிக்கப்பட்ட பையனுக்கு மருந்து வாங்க ரூ.500 ரோட அலைஞ்சிகிட்டு இருந்தா இவங்க அதையும் பிடிங்கிட்டு அனுபுறாங்க. பையன் சாகட்டும் என்று விட்டுவிட்டேன்.” என பதிவிட்டிருந்தார்.


இது உடனடியாக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டவுடன் தலைமைச் செயலகத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் என பலர் அவரை தொடர்புகொண்டு நடந்தவற்றை விசாரித்துள்ளனர்.


இச்சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் பாலாஜி பாலனின் வீடு தேடி வந்து மருந்தையும் தாங்கள் பெற்ற பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டு தங்களின் வருத்தத்தையும் தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...