அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

”நான் வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன்; இளைஞர் உயிர் முக்கியம்” – முதியவரின் மனிதநேயம்!

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   29 , 2021  13:40:18 IST


Andhimazhai Image

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் உடலை நடுங்க வைக்கும்  அளவிற்கான துயர சம்பவங்களும், மனதை நெகிழ வைக்கும் அளவிற்கான மனிதநேயமிக்க செயல்களும் நாளுக்கு நாள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் 85 வயது முதியவரான நாராயண் தபால்கர் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தான் அவருக்கு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைத்துள்ளது. இந்தநிலையில், மருத்துவமனையில் பெண் ஒருவர் தன் 40வயது கணவருக்காக மருத்துவமனையில் இடம் கேட்டு மன்றாடியதை பார்த்துள்ளார் தபால்கர். இடம் இல்லை என்பதற்காக அவரது கணவரை சேர்க்க முடியவில்லை.

இதைப் பார்த்த தபால்கர் “நான் என் வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். இளம் வாலிபர் ஒருவரின் உயிர் முக்கியம், அவரது குழந்தைகளும் சிறு வயதினர், என் படுக்கையை அவருக்குக் கொடுங்கள்” என்று கூறியுள்ளார்.

அதற்கு மருத்துவர்கள், ”உங்கள் உடல் நிலை சரியாக இல்லை உங்களுக்கும் சிகிச்சை அவசியம் என்று” கூறியுள்ளனர். ஆனால் தபால்கர் ஒப்புக்கொள்ள வில்லை. தன் சொந்த விருப்பத்தின் பேரில் இல்லத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டு புறப்பட்டார். வீட்டுக்குச் சென்று என் இறுதிக்காலத்தை உங்களோடு கழிக்கிறேன் என்று சொல்லியதாக அவரது மகள் கூறுகிறார். அதன் பின்னர் மூன்று நாட்கள் மட்டும் தான் தபால்கர் உயிரோடு இருந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில புள்ளியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தபால்கர், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர். தான் ஆபத்தான நிலையில் இருக்கிறோம் என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் மற்றொருவருக்குப் படுக்கை கொடுத்து உதவியிருக்கும் தபால்கரின் செயல் பலரையும் கலங்க வைத்திருக்கிறது.

 
இச்செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து அவருக்கு மரியாதை செய்துள்ளார் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...