அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு 0 “என்னுடைய பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் ஒன்றிய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி” -கமல்ஹாசன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   22 , 2021  19:22:09 IST

நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு, இதை மாற்ற முடியாது என்றும் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறி மாணவர்களை ஏமாற்ற வேண்டாம் எனவும் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
 
சிவகங்கையில் நடந்த திருமண விழா ஒன்றில் எச்.ராஜா கலந்து கொண்டார். விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கையால் தற்போது சிவகங்கை கவுரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 142 ஏக்கரில் 10 ஏக்கரை மீட்டுள்ளனர். மீதியுள்ள இடத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நீதிமன்றங்கள் கோவில் நிலங்கள் குறித்து வழங்கிய தீர்ப்புகளை அமல்படுத்துங்கள் என்று கூறிய எச்.ராஜா, முன்னாள் அமைச்சர் பொங்களூர் பழனிச்சாமியின் கல்லூரியில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன அதையும் அமைச்சர் மீட்க வேண்டும் என்றார். தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நல்ல ஆன்மிகவாதி, அவரை அதிகாரிகள் ஏமாற்றிவருகின்றனர் என்றார்.
 
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்தால் மாநில அரசை ஊராட்சி என்று அழைக்கலாமா? என்று  கேள்வி எழுப்பிய எச்.ராஜா, படிப்பு, பாரம்பரியம் என தற்பெருமை பேசாமல் நிதியமைச்சர் தமிழகத்தின் நிதியை நிர்வாகம் செய்ய வேண்டும் என்றும், நதிநீர் பங்கீட்டில் மக்களுக்குத் துரோகம் செய்தது திமுக அரசாங்கம்தான் என்றும் கூறினார்.
 
தொர்ந்து பேசிய எச்.ராஜா, நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பால் வந்துள்ளது. இதனால் இடஒதுக்கீடு எதுவும் பாதிக்கப்படவில்லை. 2004 ல் இருந்து 2016 வரை அரசு பள்ளிகளில் படித்தவர்களில் 202 பேர் தான் மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்யபட்டுள்ளனர். ஆனால், சென்ற ஆண்டு 400 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு, இதை மாற்ற முடியாது. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறி மாணவர்களை ஏமாற்ற வேண்டாம் என்று கூறினார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...