அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு 0 “என்னுடைய பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் ஒன்றிய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி” -கமல்ஹாசன் 0 இரண்டாவது டி20: இந்திய அணி பேட்டிங்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சிவசங்கர் பாபா மீது குண்டர் சட்டம்?

Posted : புதன்கிழமை,   ஜுலை   21 , 2021  14:58:30 IST

சிவசங்கர் பாபா மீது குண்டர் சட்டமும் பாயலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளி மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் சிவசங்கர் பாபா மீது அடுத்தடுத்து போக்ஸோ வழக்குகள் போடப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2 போக்ஸோ வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவதாகப் போடப்பட்ட போக்ஸோ வழக்கிலும் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், சிவசங்கர் பாபாவிற்கு உடந்தையாக இருந்த ஆசிரியைகளிடம் விசாரணை நடத்துவதற்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

குறிப்பாக 5 ஆசிரியைகளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர்கள் வீட்டை பூட்டிவிட்டுத் தப்பி சென்றுவிட்டதாக முதற்கட்டமாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மூன்று ஆசிரியைகள் மட்டும் விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும், மீதம் இருக்கும் 2 ஆசிரியைகளிடமும் விசாரிப்பதற்கான நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது போக்ஸோ வழக்கு தொடர்பாக கைது நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தை மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவைப் பெற்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 3 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது அடுத்து குண்டர் சட்டமும் பாயலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள இருப்பதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...