அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அம்மா உணவகத்தின் மீது திமுகவினர் தாக்குதல்: நடவடிக்கை எடுத்த தலைமை!

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   04 , 2021  15:13:03 IST

அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை கட்சியிலிருந்து நீக்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக எம்.எல்.ஏ சுப்ரமணியன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள அம்மா உணவகத்திலிருந்த பெயர் பலகையை திமுகவினர் வெளியே எடுத்து வீசியுள்ளனர். உணவகத்தில் அம்மா உணவகம் என்ற பெயர்ப்பலகை தொங்க விடக்கூடாது என அங்கிருந்த ஊழியர்களை எச்சரித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பலர் கேட்டுக் கொண்டனர்.

இதனிடையே அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தியவர்களை ஸ்டாலின் கட்சியிலிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளார் என்று திமுக எம்எல்ஏ சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார் என்றுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...