அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கொரோனா போராளிகளின் கதைகள்: டெட்டால் நிறுவனத்தின் வித்தியாசமான முயற்சி!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   08 , 2021  14:31:12 IST


Andhimazhai Image

கார்ப்பரேட் கம்பெனி என்றாலே சமூக அக்கறையற்றவை என்பது தான் எல்லோருடைய கருத்தும். ஆனால், இந்த பேரிடர் காலத்தில் சில கார்ப்பரேட் கம்பெனிகளின் நடவடிக்கைகள் அவற்றை பொய்யாக்கவும் செய்துள்ளது. ”கொரோனா வைரஸ் பாதிப்பில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தால், உயிரிழந்தவருக்கு 60 வயது நிறைவடையும்வரை அவரின் குடும்பத்தினருக்கு ஊதியம் வழங்கப்படும்” என்று டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்ததற்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு இருந்தது.

அதேபோலவே, இந்தியாவில் மிகவும் பிரபலமான கிருமி நாசினி தயாரிப்பு நிறுவனமான ‘டெட்டால்’ கடந்த சில தினங்களுக்கு முன்பாக ’டெட்டால் சல்யூட்ஸ்’ என்ற விழிப்புணர்வு பாடலை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து டெட்டால் நிறுவனம், அதன் ‘லோகோ’ படத்துக்கு பதிலாக, கொரோனா போராளிகளின் படங்களை பிரசுரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அவர்களின் படத்தை பிரசுரிப்பதுடன் மட்டுமின்றி, அவர்கள் ஆற்றிய சாதனை குறித்த தகவலையும் வெளியிட உள்ளது. ‘டெட்டால் சல்யூட்ஸ்’ எனும் இந்த பிரசாரத்தில், ‘டெட்டால் ஹேண்ட் வாஷ்’ பேக்குகளில், நாடு முழுக்க உள்ள கொரோனா போராளிகளில், 100 பேர்களின் ஊக்கமளிக்கும் கதைகளைப் பிரசுரிக்க உள்ளது. இவர்கள் அனைவரும் தொற்று நோய் காலத்தில், எண்ணற்ற மக்களுக்கு உதவியவர்கள் என்பதால் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இந்தக் கதைகள் நம்பிக்கை அளிக்கும் என ’டெட்டால்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. பெருநகரங்கள், சிறய கிராமங்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என பலதரப்பட்ட கொரோனா போராளிகளின் கதைகளே இவை.

வரலாற்றின் முதல் முறையாக, ‘டெட்டால்’ அதன் லோகோவை நீக்கிவிட்டு, அதற்குப் பதில், கோவிட் போராளிகள் படங்களையும் பிரசுரிக்கிறது. இந்த, ‘டெட்டால் சல்யூட்ஸ்’ பேக்குகள் மின்னணு வர்த்தக நிறுவனங்களின் வாயிலாகவும், நாட்டில் உள்ள, 5 லட்சம் ஸ்டோர்கள் வாயிலாகவும் விற்பனைக்கு வருகிறது. 4 மில்லியன் பேக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவை ஜூன் மூன்றாவது வாரத்திலிருந்து கிடைக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், www.DettolSalutes.com. என்ற இணையதளம் மூலம் கொரோனா போராளிகள் நூறு பேரின் கதைகளை நாடு முழுக்க கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளது.

இந்தப் பேரிடர் காலத்தில் கொரோனாவுக்கு எதிராக போராடி வருபவர்களை கௌரவப்படுத்துவது முக்கியமான ஒன்றாகும். அதை ’டெட்டால்’ நிறுவனம் வித்தியாசமான முறையில் கையிலெடுத்திருப்பது கவனிக்கத்தக்கதாகும்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...