அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்!” - சி.வி. குமார் 2

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   07 , 2019  15:02:39 IST


Andhimazhai Image
கதை கேட்டல்:
 
யாரிடம் கதை கேட்டாலும் முதலில் அந்தக் கதை அவரின் கதைதானா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். என்னிடமே அப்படி இரண்டு சம்பவங்கள் நடந்து விட்டன.
 
கதையைப் பற்றி பல்வேறு கேள்விகளை அவரிடம் கேட்டாலே அக்கதையை அவர்தான் எழுதினாரா இல்லையா என்பதைக் கண்டுபிடித்து விட முடியும்.
 
இங்கே பலரும் காப்பிதான் அடிக்கின்றனர். அதை உள்ளபடி அவர்கள் நம்மிடம் சொல்லிவிட்டால் எங்கிருந்து தழுவல் நடந்ததோ அந்த மூலத்துக்கு உரிய பெயரோ, பணமோ தந்து நம் வேலையைச் செய்வது நாணயமானது. நல்ல பெயர் எடுத்த பின் நம்மை எங்கே கவிழ்ப்பது என்று பலரும் காத்திருக்கின்றனர். கதைத் திருட்டு என்று போய் நம் பெயரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.
 
கதை அவருடையதுதானா என்பதை அறிந்ததுடன், அக்கதையில் அவருக்கு எந்த அளவுக்கு knowledge  உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அதிலுள்ள காட்சிகளை எப்படி எல்லாம் எடுப்பீர்கள் என்பதை நுட்பமாகக் கேளுங்கள். என்னிடம் ஒரு ஆள் வந்து கதை சொன்னார். கதை பிடித்திருந்தது. அதை எப்படி எல்லாம் எடுப்பீர்கள் என்று விலாவாரியாகப் பேசினோம். கிட்டத்தட்ட நான்கு நாட்கள் அந்த ஆளோடு செலவழித்தேன். படத்திற்கு பட்ஜெட் கேட்டேன். 2 கோடியில் முடித்து விடுவேன் என்றார். என்னால் அது சாத்தியம் எனத் தோன்றவே இல்லை. நிச்சயம் 4.5 கோடி ஆகும் என்றேன். ஒன்று என்னை ஏமாற்றுகிறீர்கள். இரண்டு கோடி என்று சொல்லிவிட்டு பட்ஜெட்டை இழுத்துக்கொண்டே போவது. அல்லது இரண்டு கோடிக்குள் சுருக்கி எடுத்து விட்டு கண்டென்ட்டுக்கு மோசம் செய்வது இதுதான் நடக்கும் என்றேன். இல்லை இல்லை. பட்ஜெட் இதோ பாருங்கள் என்றார். அது என் வேலை. பட்ஜெட் போடுவது உங்கள் வேலை இல்லை என்றேன். இருவருக்கும் ஒத்து வரவில்லை. போய் விட்டார். கடைசியில் எனக்குத் தெரியாமல் என் நண்பரே அதைத் தயாரித்தார். படம் 2 கோடி என ஆரம்பித்து 5 கோடி வரை இழுத்து விட்டது. கடைசியில் படம் பிளாப்.
 
படத்தில் பயன்படுத்தப்படும் கேமரா பற்றி, ஆர்ட்டிஸ்ட் பற்றி, எத்தனை லொக்கேஷன், எத்தனை ஷாட் என்பதைப் பற்றி அனைத்தையும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். படம் ஷூட் ஆரம்பிக்கும் முன் அனைத்தும் துல்லியமாக பட்ஜெட் போடப்பட்டு ஆவணமாக்கப்பட வேண்டும். எல்லாம் பேப்பரில் இருக்க வேண்டும். ஸ்கிரிப்ட், பட்ஜெட், செலவு விவரம், அட்வான்ஸ் அனைத்தும் ஆவணத்தில் இருக்க வேண்டும். இவை எல்லாம், எந்தவிதத்திலும் படம் நம் கையை விட்டு போகக் கூடாது; பட்ஜெட்டை மீறிவிடக் கூடாது என்பதற்காகவே. எல்லாம் ரெடியாகி ஷூட்டிங் போனபிறகு அவர்களை எங்கேயும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. நான் என்னுடைய படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வேடிக்கை பார்க்க செல்வேனே தவிர இந்த ஷாட்டை ஏன் வைக்கிறாய் என்றோ அல்லது டைரக்டர் அல்லது கேமராமேனின் அன்றாட வேலையிலோ தலையிட்டு டிஸ்டர்ப் செய்வதே இல்லை.  தலையீடு செய்யக் கூடாது. முதலிலேயே எல்லாவற்றையும் பேப்பரில் முடித்திருக்க வேண்டும்.
 
கதையை முடிவு பண்ணி, எந்த சென்டருக்கான படம் என்பதை முடிவு செய்து, பட்ஜெட் போட்டுவிட்டு, அதற்குள் லாபம் எடுப்பதைப் போல் எந்த ஆர்டிஸ்ட்ஸ் போடலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும். மாறாக இந்த ஆர்ட்டிஸ்டுக்கு இந்த பட்ஜெட் என்று போடக் கூடாது. என்னோட படங்களில் பட்ஜெட்டுக்குள் அடங்குமாறு நடிகரை, கேமரா மேனை, இசையமைப்பாளரை ஃபிக்ஸ் பண்ணுவேன்.
 
இந்தத் துறையில் சில டைரக்டர்கள், ஒரு செட்டாகத்தான் இணைந்திருப்பார்கள். அவர்களுக்கு இன்னார்தான் இசையமைப்பாளர் இன்னார்தான் கேமரா மேன் என்று டீமாக இருப்பர். அந்த டீமைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு நீங்கள் முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
 
உங்கள் படத்துக்கான டீமைத் தேர்வு செய்வது மிக முக்கியமான வேலை. உங்கள் ஸ்கிரிப்டைப் படமாக்க அதில் ஒவ்வொருவரும் எப்படி அர்ப்பணிப்போடு வேலை செய்வர் என்பதை அவர்களின் திறமை, அனுபவம் இவற்றை வைத்தும் ஒரு டீம் ஒர்க்காக இவர்கள் சேர்ந்து செய்தால் சரியாக வருமா என்பதை வைத்தும் உங்கள் படத்துக்கான டெக்னிக்கல் டீமை உருவாக்க வேண்டும். பொதுவாக உங்களுக்கு செட் ஆனால் ஒரே டீமைத் தொடர்ந்து பண்ண வைத்தால் நல்லது.
 
ஷூட்டிங் எவ்வளவு முடிந்திருக்கிறது? என்ன செலவாகியுள்ளது? இசை, எடிட்டிங் ஒவ்வொன்றிலும் என்ன நடக்கிறது என்பதை அக்குவேறு ஆணிவேராகத் தெரிந்து தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 
கண்டென்டுக்கு ஏற்ற பட்ஜெட் போடுங்கள். விஸ்வாசம் என்றால் அந்த கண்டென்டுக்கு அதுதான் பட்ஜெட். நாம் எடுப்பது பக்கெட் ஸ்பெசிபிக் படம், அதற்குத் தக்க பட்ஜெட்தான் போட வேண்டும்.
 
டெக்னீசியன்களிடம் சம்பளம் பேசும்போது பட்ஜெட்டினை மையமாக வைத்துப் பேச வேண்டும். ஒரு சிறந்த கேமராமேன் தனது சம்பளம் தற்போது பத்து லட்சம் என்று பேரம் பேசினால், “என்னிடம் இரண்டு லட்சம்தான் உள்ளது. இதுதான் இந்தப் படத்தின் கேமரா மேனின் சம்பளம். உங்களுக்கு சம்மதம் என்றால் சேர்ந்து வேலை செய்வோம். அடுத்து பெரிய பட்ஜெட் படம் எடுத்தால் அதற்குத்தக்கபடி கேமரா மேனின் சம்பளம் இருக்கலாம். அது அந்தப் படத்துக்கு” என்று வெளிப்படையாகப் பேசி அவர்கள் ஒத்துக் கொண்டால் சேர்த்துக் கொள்ளுங்கள். டைரக்டரோடு இதை எல்லாம் பேசுங்கள். படத்துக்கு எது தேவை எது தேவை இல்லை என்பதை அவரோடு பேசி உங்கள் முடிவைத் தெளிவுபடுத்துங்கள்.
 
ஒரு இடத்தில் ஐம்பது, நூறு நபர்களை இரண்டு மணி நேரம் அமைதியாக உட்கார்ந்து நீங்கள் சொல்வதை, விவரிப்பதை பொறுமையாகக் கேட்க-கவனிக்க வைப்பது எளிதான காரியமல்ல. ஆனால் சினிமாவாக ஒரு கதையை எடுத்து ஆயிரம் பேர்களை லட்சம் பேர்களை கட்டுண்டு கிடக்க வைப்பதற்கு சில பேட்டர்ன்கள் தேவை.
 
பார்வையாளர்கள் மத்தியில் அடுத்து என்ன? என்றோ எப்படி இது நிகழ்ந்தது என்றோ ஒரு ஈர்ப்பை ஒரு ஸ்க்ரிப்ட் உருவாக்கலாம். அந்த விஷயம் ஸ்கிரிப்டில் இருக்கிறதா என்பதை நான் பார்ப்பேன். நான் தொடர்ந்து ஸ்கிரிப்ட்ஸ் படிக்கிறேன். நூறு பக்கத்தைக் கூட நாற்பத்தைந்து நிமிடத்தில் படித்து விடுவேன். தினமும் இரண்டு ஸ்கிரிப்டாவது படித்து விடுகிறேன். என்னைப் பொறுத்த அளவில் நாற்பத்தைந்து நிமிடத்துக்கு வேறு எதையும் நான் செய்யாமல் ஸ்கிரிப்டை மட்டும் படிக்க முடிந்தது என்றால் நிச்சயமாக அந்த ஸ்கிரிப்ட் படமாக்கப்படத் தகுதியான ஒன்றுதான். என்னை அது கட்டிப்போட்டு விட்டது. இதைப்போல்தான் அது லட்சம் பேரையும் கட்டி இழுத்து விடும் என்று முடிவெடுக்கிறேன். சிலவற்றை பத்துப் பக்கம் படிக்கும்போது அப்புறம் படிக்கலாம் என மடித்து வைப்பேன். அடுத்த நாள் இருபது பக்கம் படிப்பேன். அப்போது போன் வந்தால் அதை அட்டென்ட் பண்ணி விட்டு அடுத்துப் படிக்க ஆரம்பிப்பேன். இப்படி நாலு நாள் படிக்கையில் எங்கெங்கெல்லாம் மடக்கி வைக்கிறேனோ அந்த இடங்களில் எல்லாம் ஸ்கிரிப்ட் படுத்தி எடுக்கிறது என்று அர்த்தம். அந்த மாதிரி ஸ்கிரிப்டைத் தந்தவரைக் கூப்பிட்டு ‘இது சரியில்லை’ என்று சொல்லிவிடுவேன்.
 
டைட்டில் தேர்வு செய்வது என்பது ஒரு படத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அதுதான் ஆடியன்சை முதலில் ஈர்க்க வல்லது. அதுவும் கண்டன்ட் படம்/சின்ன பட்ஜெட் படத்துக்கு இது மிகவும்  கவனம் செலுத்த வேண்டிய விசயமாகும். மிகவும் நீளமாக இருக்கக் கூடாது. பெரும்பாலும் ஒரே வார்த்தை அல்லது இரண்டு வார்த்தைகளில்ல் இருப்பது நல்லது. எல்லோருக்கும் புரியும்படி இருக்க வேண்டும். கடைக்கோடி மக்கள் வரை ரீச் ஆகும் அளவுக்கு அது இருக்க வேண்டும். உங்கள் ஆடியன்ஸ் யார் என்பதை வைத்து படத்தின் டைட்டிலை வைப்பது அவசியம். மல்டிபிளக்ஸ் ஆடியன்சுக்கு மட்டும்தான் என்றால் catchy ஆன இங்கிலிஷ் டைட்டிலே வைத்துவிடலாம்.
 
சி சென்டர் வரை பேசப்பட வேண்டும் என்றால் நம்ம வீட்டுப் பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் போன்ற டைட்டிலைத் தேர்வு செய்ய வேண்டும்.
 
டைட்டில், டிசைன், கலர் எல்லாமே முக்கியம். எந்தத் தரப்பு மக்களுக்கான படம் என்பதையொட்டி கலரைத் தேர்வு செய்ய வேண்டும். நடுத்தர வர்க்கத்துக்கான சப்ஜெக்ட் என்றால் அந்த வர்க்கத்தினருக்கு என்ன கலர் பிடிக்கும். என்ன வகை பர்னிச்சர் உபயோகிப்பர் என்பதைப் பார்த்துப் பார்த்து படத்தில் வைத்தால் அது அவர்களை ஈர்க்கும். 70 இஞ்ச் டிவி எல்லாம் அவர்கள் வீட்டில் இருக்காது. அதை வைக்க முடியாது. மிடில் கிளாஸ் ஆடியன்சுக்காக படம் எடுக்கப் போய் மிகவும் வசதிமிக்க வீட்டைக் காட்டினால் அதில் அவர்கள் ஒன்ற மாட்டார்கள். அவர்கள் வீடு எப்படி இருக்கும், என்ன மாதிரி உடை அணிவர். அதன் நிறம் என்ன என்பதெல்லாம் முக்கியம். அதே போல்தான் டைட்டில், கலர் எல்லாம்.
 
கோக் பாட்டில் பார்த்திருக்கிறீர்களா? அந்தப் பாட்டிலின் வடிவம் கூட காப்புரிமை பெற்றது. அந்தப் பாட்டிலின் உடைந்து சிதறிய ஒரு துண்டைப் பார்த்தால் கூட இது கோக் பாட்டில் என்பதைக் கண்டுணர்வது போல் டிசைன் செய்துள்ளனர். அதே போல் டைட்டில் டிசைனை எல்லோர்க்கும் புரியும்படி பண்ண வேண்டும். போஸ்டரை 30 டிகிரி முதல் 40 டிகிரி கோணத்தில்தான் பார்க்க முடியும். அந்தக் கோணத்துக்குள் எல்லோர் மனதிலும் நிற்கும்படி டைட்டில் டிசைன் எல்லாம் பண்ண வேண்டும். வேகமாக பைக்கில் செல்லும் ஒருவன் நொடிப்பொழுதில் போஸ்டரைக் கடக்கும்போது அவனை ஈர்க்க என்ன கலரைப் பயன்படுத்தவேண்டும் என்று யோசித்து தேர்வு செய்ய வேண்டும். மூன்று போஸ்டர்களுக்கு மேல் ஹாலிவுட்டில் டிசைன் செய்வதில்லை. அவற்றையே மாற்றி மாற்றிக் காட்டி மனதில் ஆழமாகப் பதிய வைத்து விடுவார்கள். இருபது ஆண்டுகள் கழிந்த பிறகும் இன்னமும் நம் மனதில் டைட்டானிக் படத்தின் போஸ்டர் நினைவில் இருப்பதன் ரகசியம் இதுதான். இதே போல் நம் படத்தின் போஸ்டர் நிலைத்திருக்கும்படி டிசைனில் தீவிர அக்கறை செலுத்த வேண்டும். இரண்டு அல்லது மூன்று வகை போஸ்டர் மட்டும் தொடர்ந்து கண்ணில் படும்படி விளம்பரம் தந்து கொண்டே இருக்கும்போது இன்ன கம்பெனி படம் வருகிறது..இன்னின்னார் நடிக்கிறார்கள் என்ற தகவல் sub conscious mind இல் மக்களுக்குப் பதிந்து விடும். அதுதான் பிராண்டிங். பீட்சா பட விளம்பர போஸ்டருக்கு டி.சி. காமிக்ஸ்தான் எங்களுக்கு ஆதர்சம். தினத்தந்தியில் ஒரே பக்கத்தில் இருபது படங்களுக்கு விளம்பரம் வருகிறது. அதில் உங்கள் படம் மட்டும் தனித்துத் தெரிந்து ஆடியன்சைக் கவர வேண்டும் என்றால் டிசைன் செய்ய நீங்கள் கண்டிப்பாக மெனக்கெட வேண்டும்.
 
சூது கவ்வும் படத்துக்கு முதலில் கரச்சல் என வைத்திருந்தோம். சரியாக வரவில்லை. அடுத்து பிளாக் டிக்கெட் என வைக்கலாம் என்ற கருத்து வந்தது. அதுவும் சரியாகத் தெரியவில்லை. சூது கவ்வும் என வைக்கலாம் என்று ஆலோசனை வந்தபின் இந்த டைட்டல் கவர்ச்சியாக இருந்தது. இதுதான் மக்களை எடுத்த எடுப்பில் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த மாதிரி விசயங்களில் தீவிர ஈடுபாடு காட்டி பல காம்பினேசன்களை முயற்சி செய்வது என்பது ஒரு தயாரிப்பாளரின் அடிப்படை வேலை.
 
அதே போல், டீசர், டிரைலர் - இவற்றில் கம்பெனிக்கான பிராண்டிங், என்ன கதையை சொல்ல வருகிறோம் என்பது இருக்க வேண்டும். டைட்டில், போஸ்டர், டீசர், டிசைன் இந்த நான்கும் மக்களுக்குத் தரும் இன்விடேசன். இவை பிடித்திருந்தால்தான் படத்துக்கு வரப் போகிறார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு பேட்டர்ன் இருக்கிறது. டீசர் டிரைலர், எடிட்டரோடு சேர்ந்து உட்கார்ந்து வெட்டுவதில் மிக மிக சிரத்தை எடுக்க வேண்டும். இவை ஒவ்வொன்றைக் குறித்தும் டைரக்டரோடு ஆலோசனை நடத்தவேண்டும்.
 
எங்கள் அலுவலகத்தில் பக்காவாக தகவல்களை மெயின்டைன் பண்ணுவோம். அடுத்த வாரம் திருநின்றவூரில் சூட்டிங் போகிறார்கள் என்றால் பத்து நாட்களில் அந்த ஊரின் வானிலை என்ன என்பது வரை நான் கேட்பேன். வானிலையை வைத்துதான் அங்கே போவதா இல்லையா என்பதை முடிவெடுப்பேன். ரிமோட் ஏரியாவில் ஷூட்டிங் போகிறது. இரண்டாம் கால்சீட்டும் போக வேண்டியிருக்கிறது என்றால் அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கான வசதிகள் அந்த ஸ்பாட்டிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது? அவ்வளவு பேருக்கும் கிடைக்க என்ன செய்வது வரை நாம் திட்டமிட்டு வைத்திருக்க வேண்டும்.
 
தமிழில் திரைக்கதை மட்டும் எழுதிக் கொடுக்கும் எழுத்தாளர்கள் குறைவு. தற்போது இல்லை என்றே சொல்லலாம். டைரக்டரே ஸ்கிரிப்டையும் எழுதும் வழக்கம்தான் உள்ளது. நானே பல நாவல்களை, கேபிள் சங்கர், ராஜேஷ்குமார், ரமணிசந்திரன் ஆகியோரிடம் விலைக்கு வாங்கி வைத்துள்ளேன். சிலரிடம் ஸ்கிரிப்ட் வாங்கியும் வைத்துள்ளேன். இதைப்போல் நிறைய பேர் வரவேண்டும். ஹாலிவுட்டில் எல்லாம் இதுதான் வழக்கம்.
 
படத்தை தயாரித்து விநியோகஸ்தரையோ அல்லது வி.ஐ.பி யாரையாவதோ அழைத்து காட்ட வேண்டுமானால் முதலில் அவர்களை அருமையான டீசர், டிரைலர் வைத்து ஈர்க்க வேண்டும். 
 
தொழில்முறை மரபான சினிமா கம்பெனியில் என்னென்ன இருக்க வேண்டும்?
 
1.        In house Editor
 
2.        Executive producer
 
3.        Very good managers
 
கடைசி இருவரும் மிக மிக முக்கியமானவர்கள். உங்களுக்கு அப்புறம் பிராஜெக்டை இவர்கள்தான் ஹேண்டில் பண்ணப் போகிறவர்கள். முன்பெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் நாம் எடுத்த படத்தை ரஷ் போட்டு பார்க்க முடியாது. தற்போது எல்லாமே டிஜிட்டல் என்பதால் ஆறு மணிக்கு முடிந்த சூட்டிங்கில் எடுத்தவற்றை எட்டு மணிக்கெல்லாம் பார்க்க முடியும். இதற்கு ஒரு ஆப் கூட வந்துள்ளது. எந்த ஊரில் இருந்தாலும் இன்று படமான காட்சிகள் எவை என்பதை follow பண்ணிவிட முடியும். ஸ்கிரிப்டில் சொல்லப்பட்ட சீன்களை எல்லாம் எடுத்து முடித்தார்களா என்பதை ஒவ்வொரு இரவிலும் நான் சரி பார்ப்பேன். அதில் குறிப்பிட்டிருந்த ஆங்கிள் ஷாட் எல்லாம் எடுக்கவில்லை என்றால் உடனே கூப்பிட்டு நிறுத்தி விடுவேன். சரியான காரணத்தை முன் கூட்டியே ஏன் சொல்லவில்லை எனக் கேட்டு அதை எப்போது எடுப்பது என்பது வரை என் கட்டுப்பாட்டில் புரொடக்சனை வைத்துக் கொள்வேன். அதே போல் டீம் கேட்கும் மெட்டீரியலை எப்படியாவது காலத்துக்குள் கிடைக்கச் செய்துவிடுவேன். எடிட்டிங் சூட் ஒன்று கம்பெனியில் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஷூட்டிங் முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் எக்சல் சீட்டில் செலவுகளை ஏற்றிவிட வேண்டும். உங்கள் ரசனையோடு ஒத்துப் போகும் ஒன்றிரண்டு டிசைனர்களாய் அமர்த்திக் கொள்ள வேண்டும். டெக்னீசியன்களோடு நிறைய நேரம் செலவிடுங்கள். அவர்களிடமிருந்து பல நுட்பங்களைக் கற்றுக் கொள்வது அவசியம். அதே போல் உங்களின் எதிர்பார்ப்பை அவர்கள் புரிந்து கொள்ள இது உதவும்.
 
- கற்பகவிநாயகம்
 
(BOFTA  திரைப்படக் கல்லூரி நடத்திய திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் தயாரிப்பாளருமான இயக்குநருமான சிவி குமார் நிகழ்த்திய உரையிலிருந்து)
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...