அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கொரோனா பணியில் இருக்கும் மருத்துவர், செவிலியர்களுக்கான உணவு செலவு நிர்ணயம்!

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   10 , 2021  11:52:06 IST

கொரோனா பணியில் இருக்கும் மருத்துவர், செவிலியர்களுக்கான ஒரு நாள் உணவு செலவு ரூ.460 -ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


சென்னை சைதாப்பேட்டையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பணியில் இருக்கும் மருத்துவர், செவிலியர்களுக்கான ஒரு நாள் உணவு செலவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான ஒரு நாள் உணவு செலவு அதிகபட்சம் ரூ.460 -ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.30 லட்சம் மிச்சமாகிறது. அதிகமாக வசூலிக்கப்பட்ட மருத்துவர், செவிலியருக்கான தங்கும் அறை வாடகையும் குறைக்கப்பட்டுள்ளது.
 

மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா நோய்த்தொற்றின் முதல் அலையின்போது பணியிலிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு உணவு தொகையாக ரூ.600 செலவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதில் முறைகேடு ஏதேனும் நடந்ததுள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.
நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், நீட் தேர்வு பாதிப்பு பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு  நீட் தேர்வு விலக்கு குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...