அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி கடிதம்! 0 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஆயுள் கைதி உதவி! 0 ”நாங்க நினைச்சா நீங்க ஊருக்குள்ள வாழவே முடியாது…” – கொரோனாவிலும் சாதிவெறி! 0 கேட்க யாருமில்லை? – பீட்டர் அல்போன்ஸ் 0 ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் - முதல்வர் ஸ்டாலின் 0 நாந்தாம்மா மு.க.ஸ்டாலின் பேசுறேன்!... முதல்வர் நீட்டிய உதவிக்கரம்! 0 ரெம்டெசிவிர் தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு தகவல்! 0 மின் மயானங்களில் உடல்களைத் தகனம் செய்வதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க நடவடிக்கை! 0 இரு சக்கர வாகனங்களின் சாவிகளை மறைத்து வையுங்கள்- ராமதாஸ் 0 கொரோனாவிலிருந்து மீண்ட புதுவை முதல்வர் ரங்கசாமி! 0 ரெம்டெசிவர் மருந்து: நேரு உள்விளையாட்டு அரங்கம் எதிரே பொதுமக்கள் சாலை மறியல்! 0 விசிக பொருளாளர் யூசுப் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்! 0 ஒவ்வொரு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2000! 0 அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல்: 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை! 0 விசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப் கொரோனாவால் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கொரோனா தொற்று: இயக்குநர் தாமிரா உயிரிழப்பு!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   27 , 2021  10:15:09 IST

கொரோனா பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் தாமிரா (வயது -52) இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருநெல்வேலியை சேர்ந்தவர் தாமிரா என்ற காதர் முகைதீன். மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். 2010ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 'ரெட்டைச் சுழி' என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இதன் பின்னர் சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் ஆகியோர் நடிப்பில் 'ஆண் தேவதை' என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி வந்திருந்த தாமிராவுக்கு அண்மையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் மாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று காலை, சிகிச்சை பலனின்றி தாமிரா உயிரிழந்தார். இந்தச் செய்தியை அவரது செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

தாமிராவின் மறைவுக்கு திரையுலகினர், எழுத்தாளர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...