அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு

Posted : புதன்கிழமை,   ஜுன்   23 , 2021  18:42:31 IST

இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படையாக குறையத் தொடங்கியுள்ள நிலையில், மூன்றாவது அலை விரைவில் தாக்கக்கூடும் என பலரும் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், டெல்டா பிளஸ் எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளது.  இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்று உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியது.
 
இந்த டெல்டா வைரஸ் தற்போது டெல்டா பிளஸ் வைரஸாக உருமாறியுள்ளது. இந்த வகை வைரஸ், தடுப்பூசியின் வீரியத்தை குறைக்கக் கூடியது என்று அண்மையில் மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர். டெல்டா வகை வைரஸ்க்கு எதிராக, கொரோனா தடுப்பூசிகள் பெரியளவில் பலனளிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் இதுவரை 22 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில் 16 பேர் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில்  தமிழகத்தில் தற்போது ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகைக் கொரோனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...