அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு 0 “என்னுடைய பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் ஒன்றிய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி” -கமல்ஹாசன் 0 இரண்டாவது டி20: இந்திய அணி பேட்டிங்! 0 இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் நேரம் 1 நிமிடமாக அதிகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இந்தியாவில் கொரோனாவால் 50 லட்சம் பேர் உயிரிழப்பு!

Posted : புதன்கிழமை,   ஜுலை   21 , 2021  14:47:21 IST

இந்தியாவில் பெருந்தொற்று காலத்தில் கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் உயிரிழந்திருக்கலாம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக உலக நாடுகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக, இறப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமான தகவலை விட அதிகமாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் பெருந்தொற்று காலத்தில் 40 லட்சத்து 90 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையில் உலகளாவிய வளர்ச்சிக்கான மையம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து இந்த ஜூன் மாதம் வரை நிகழ்ந்த இறப்புகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமான தகவலின்படி, இந்தியாவில் இதுவரை 4 லட்சத்து 14 ஆயிரம் பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவலைத் தொடர்ந்து இறப்புகளை மீண்டும் கணக்கெடுக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தாக்கம் குறிப்பாக டெல்டா வகை பரவல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகமாக இருந்தது. மே மாதம் மட்டுமே 1,70,000 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து உலகளாவிய வளர்ச்சிக்கான மையம் வெளியிட்ட அறிக்கையில், "பெருந்தொற்று காலத்தில் ஆயிரக்கணக்கானோர் இல்லாமல் லட்சக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பெருந்தொற்று காலத்தில் 34 லட்சம் முதல் 49 லட்சம் வரை உயிரிழந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான இறப்புகளும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தை ஒப்பிட்டு இறப்புகள் கணிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...