அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சேஸிங் திரைவிமர்சனம்!

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   17 , 2021  11:52:53 IST


Andhimazhai Image
 
 
காவல்துறை அதிகாரியாக மிடுக்குடன் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கும் படம் சேஸிங். துறை சார்ந்த பயிற்சிக்காக காஞ்சிபுரம் அருகேயுள்ள சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு செல்லும் வரலட்சுமி, போதைப் பொருள் விற்கும் மாஃபியா கும்பலின் அராஜகத்தை எதிர்கொள்கிறார். அவர்களை தன்னால் ஏதும் செய்ய முடியவில்லையே  என  வரலட்சுமி வருந்துகையில் காவல் துறை உயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட, அவரை காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாகப்  பெண்  கடத்தல் மற்றும் போதை மருந்து கடத்தல் கும்பலை பற்றி உயர் அதிகாரியிடம் தகவல் தெரிவித்து, அவர்களைக் கைது செய்யும் பொறுப்பை வரலட்சுமி ஏற்கிறார். 
 
 
முக்கிய தாதாவான மலேசிய வில்லன் ஜெரால்டை கொலை செய்ய தனது டீமுடன் மலேசியா செல்லுகிறார். அப்போது அவருடைய டீமை கடத்துகிறது போதை மருந்து கூட்டம். அவர்களை வரலட்சுமி காப்பாற்றினாரா? இல்லையா? ஏன் இந்த கூட்டத்தை பழிவாங்க ஏன் திட்டமிட்டார் என்பது தான் படத்தின் மீதி கதை. இது மாஸ் ஹீரோகளுக்கான கதைக்களம். இதில் வரலட்சுமி நடித்துள்ளதுதான் புதுமை! போலீஸ் கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்தியிருக்கிறார் வரலட்சுமி.   வில்லன்களை பந்தாடும் காட்சிகள் இன்னும் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தியிருக்கலாமே என்று தோன்றுகிறது. 
 
 
சூப்பர் சுப்பராயன், மலேசிய வில்லன் ஜெரால்டு, சோனா ஆகியோரின் நடிப்பு வில்லத்தனமாகவே உள்ளது. பால சரவணன், இமான் அண்ணாச்சி ஆகியோரின் காமெடியும், கறுப்புப் பணம் தொடர்பான காமெடியும் படத்துக்கு வலுசேர்க்கின்றன.
 
 
 
சரியான கதைக்களத்தைத் தேர்வு செய்துள்ள அறிமுக இயக்குநரான வீரக்குமார், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டி இருக்கலாம் என்று தோன்றுகிறது. படத்தைப் பரபரப்பான சேஸிங் படமாக மாற்றியதற்குப் படத்தொகுப்பாளருக்கும் இசையமைப்பாளருக்கும் முக்கிய பங்குண்டு. மலேசியாவை அழகாக காட்சிப்படுத்தியுள்ள ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமியும் படத்தின் பலம் எனலாம்.
 
-தா. பிரகாஷ்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...