அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பத்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுவன்: ஆதார் கார்டு நிகழ்த்திய அற்புதம்!

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   12 , 2021  12:48:10 IST


Andhimazhai Image

ஆதார் கார்டு குறித்து பல்வேறு எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், இப்போது மக்களால் மிக சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் அடையாள அட்டையாக மாறியிருக்கிறது. அதனால் நல்ல விஷயங்களும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில், மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியில் எட்டு வயதில் காணாமல் போன  மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதார் கார்டு உதவியால் பெற்றோரிடம் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ரயில் நிலையத்தில், கடந்த பத்து வருடத்திற்கு முன்பாக 8 வயதுள்ள சிறுவனை மீட்டுள்ளனர் காவல் துறையினர். அவன் மனநலம் பாதிக்கப்பட்டது போல் இருந்துள்ளான். இதனால் அவனுடைய பெற்றோர் மற்றும் சொந்த ஊர் குறித்த எந்த தகவல்களையும் அவர்களால் பெறமுடியவில்லை. இதனால், நாக்பூரில் அனாதை இல்லம் நடத்தி வந்த சமர்த் டாம்லே என்பவரிடம் அந்த சிறுவனை ஒப்படைத்துள்ளனர். அந்த சிறுவன்,  ‘அம்மா... அம்மா...’ என்று மட்டுமே பேசிக் கொண்டிருந்ததால், டாம்லே அச்சிறுவனுக்கு ‘அமன்’ எனப் பெயரிட்டுள்ளார்.


கடந்த, 2015ஆம் ஆண்டு அனாதை இல்லம் மூடப்பட்டதால், அமனை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் டாம்லே. அமனை மிகுந்த அக்கறையுடன் வளர்த்து வந்தவர், அவனை பள்ளியில் சேர்த்தும் அழகு பார்த்துள்ளார். இந்தாண்டு, பத்தாம் வகுப்பில் அமன் சேர்வதால், ஆதார் கார்டு அவசியம் என பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஜூன்3ஆம் தேதி, அமனுக்கு ஆதார் கார்டு எடுத்திட பயோமெட்ரிக் முயற்சிக்கும் போது, அவனுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆதார் மைய மேலாளர் அணில் மாரதே பெங்களூரில் உள்ள ஆதார் தொழில் நுட்ப மையம் மற்றும் மும்பை மண்டல அலுவலகத்திற்குக் கடிதம் அனுப்பி உதவிக் கேட்டுள்ளார்.


அப்போது தான்,  அமனுக்கு ஏற்கனவே ஆதார் கார்டு பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டே அமனுக்கு ஆதார் கார்டு பதிவு செய்யப்பட்டுவிட்டது என்றும், அவனுடைய பெயர் முகமது அமீர் என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அரசு அலுவலர்களின் உதவியுடன் அமீரின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு அவனைப் பத்திரமாக ஒப்படைத்தனர். வீட்டில் குடும்ப உறுப்பினராக இருந்த அமீரை பிரிவது கடினம் என்றாலும், உண்மையான பெற்றோரிடம் ஒப்படைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என டாம்லே தெரிவித்துள்ளார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...