அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர்

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   21 , 2021  11:07:29 IST

சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16-வது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. அப்போது உரையாற்றிய  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ் இனிமையான மொழி என்றார். தனக்கு வாக்களித்தோர், வாக்களிக்காதோர் என எந்தவித பாரபட்சமின்றி அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்படும். அரசின் ஒவ்வொரு செயல்பாடும் சமூக நீதி, ஆண் - பெண் சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதியை அடிப்படையாக கொண்டிருக்கும். ஒன்றிய அரசுடன் நல்லுறவைப் பேணுவோம். மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தமிழக அரசுக்குத் தேவைப்படும் உதவிகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் முன்வைத்துள்ளார். தமிழகத்துக்கு ஒன்றிய அரசு அதிக அளவில் நிதி வழங்கிட வேண்டும்.

தமிழை ஒன்றிய அரசின் அலுவலகங்களிலும், வங்கிகளிலும் இணை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.335.01 கோடி நிதி வந்துள்ளது. உழவர் நலனைப் பேணவும், வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும் வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். கால்நடை வளர்ப்பு, இயற்கை வேளாண்மை தோட்டக்கலை பயிர்களை பயிரிடுதல் ஆகியவை ஊக்குவிக்கப்படும். கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு மீண்டும் புத்துயிர் பெறும். அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை விசாரிக்கும் லோக் ஆயுக்தா அமைப்பிற்கு அங்கீகாரம் வழங்கப்படும்.

தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க சட்டங்கள் நிறைவேற்றப்படும். நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரையைப் பெற்று சட்ட முன்முடிவுக்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா பெருந்தொற்று தீவிரம் குறைந்தவுடன் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும்.

பெரிய நகரங்களில் நெருக்கடியைக் குறைக்கப் புறநகர்ப் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும். அதேபோல், சென்னையில் மாநகர கட்டமைப்பை நவீன சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தின் நிதி நிலை கவலைக்குரியதாக இருக்கும் சூழலில் ஜூலையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவை அமைக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. அந்தக் குழுவில் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோர் அக்குழுவில் இடம்பெறுவார்கள்.

சென்னையில் வெள்ள பாதிப்புகளைக் குறைப்பது குறித்து ஆய்வு செய்ய சென்னை பெருநகர வெள்ளநீர் மேலாண்மை குழு அமைக்கப்படும்.

கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது அணை திட்டத்தை ஒன்றிய அரசு நிராகரிக்க  வேண்டும். அதேபோல், முல்லைப் பெரியாறு அணையினை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தேவையான அனுமதியை ஒன்றிய அரசும், கேரள அரசும் வழங்க வேண்டும்.

திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்க ரூ.50 கோடி, மூன்றாம் அலை முன்னேற்பாடு நடவடிக்கைக்கு ரூ.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சேமிப்பு உற்பத்தித் திறனும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் வழங்கப்படும் 69% இடஒதுக்கீடு  தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

மாவட்டம் தோறும் பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் அமைக்கப்படும்.” என்றார்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...