அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கொரோனாவுக்கு 165 பத்திரிகையாளர்கள் பலி!

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   04 , 2021  10:10:55 IST


Andhimazhai Image
கொரோனா பெருந்தொற்று நேரிடையாகவும் மறைமுகமாகவும் மிக மோசமான விளைவுகளை இந்தியாவில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இறப்பு செய்திகள் தினசரி புள்ளி விவரங்களாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 165 பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பதாக நெட்வொர்க் ஆஃப் வுமன் இன் மீடியா என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
 
 
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 60 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த ஒரே மாதத்தில் தினந்தோறும் சராசரியாக 2 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில்,  1 ஏப்ரல் 2020லிருந்து ஏப்ரல் 2021 ஏப்ரல் 28 வரை 101 பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 52 பத்திரிகையாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
 
 
 
அதேபோல், ஜனவரி 2021க்குப் பிறகு 50 பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பதாக ஃப்ர்ஸ்ட் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 19 பேரும், தெலங்கானாவில் 17 பேரும், மகாராஷ்டிராவில் 13 பேரும், தமிழகம், அசாம் ஆகிய மாநிலங்களில் தலா 4 பேரும் உயிரிழந்திருக்கின்றனர்.
 
 
 
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பத்திரிகையாளர்களுக்கு எவ்வித முன்னுரிமை வழங்கப்படவில்லை என சில பத்திரிகையாளர்கள் சமூகவலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். தேர்தல் பணிகளில் ஈடுபடும் பத்திரிகையாளர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தாலும், தடுப்பூசி செலுத்துவதில் பத்திரிகையாளர்களுக்கு எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படுவதில்லை. அரசு மற்றும் தனிமனிதர்களின் அலட்சியத்தால் ஏற்படும் கொரோனா உயிரிழப்புகள் நிச்சயம் விரைவில் தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...