அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சிபிஎம் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன?

Posted : சனிக்கிழமை,   மார்ச்   20 , 2021  10:12:26 IST

மாநில உரிமைகளுக்காக குரல் கொடுப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.

தேர்தல் அரிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கியமான அம்சங்கள்:

மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க வலியுறுத்துவோம்

தமிழில் வழிபாடு நடத்த வலியுறுத்துவோம்

சமஸ்கிருத திணிப்பை தடுப்போம்

அமைச்சர்கள், முதலமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் சொத்து விவரங்களை ஆண்டுதோறும் வெளியிடுவோம்.

எண்ணெய், தீப்பெட்டி, பனை, பட்டாசு போன்ற தொழில்களை பாதுகாப்போம்.

சட்டமன்ற நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்ப வற்புறுத்துவோம்

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றிடத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கிட தொடர்ந்து வலியுறுத்துவோம்.

30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்திட வலியுறுத்துவோம்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்துவோம்.

 பெண்களுக்கு சட்டமன்றம், பாராளுமன்றத்தில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்துவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...