அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம் 0 பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றை பெகாசஸ் கைப்பற்றியுள்ளது - மம்தா பானர்ஜி

Posted : புதன்கிழமை,   ஜுலை   21 , 2021  20:36:11 IST

பெகாசஸ் விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.



மேற்கு வங்க மக்களிடம் காணொலி மூலம் மம்தா பானர்ஜி உரையாற்றினார், “ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலம்தான் ஜனநாயகத்தை உருவாக்க முடியும். இவை மூன்றையும் பெகாசஸ் கைப்பற்றியுள்ளது. பெகாசஸ் மென்பொருள் மிகவும் ஆபத்தானது. இந்த விவகாரத்தால் சரத்பவார், தில்லி முதலமைச்சர், கோவா முதலமைச்சர் ஆகியோரிடம் என்னால் பேச முடியாது. கண்ணுக்குத் தெரியாத பொருளை என் செல்லிடப்பேசியில் பொருத்தியுள்ளார்கள்.



உளவு பார்ப்பதற்கு பணம் செலவிடும் மத்திய அரசு மக்களுக்காக செலவு செய்வதில்லை. மத்திய அரசை அடக்கி வைக்கவில்லையெனில், நாடு அழிந்துவிடும். கூட்டாட்சி கட்டமைப்பை பாஜக தரைமட்டமாக்கியுள்ளது.



ஜனநாயகத்தையும் நாட்டையும் உச்ச நீதிமன்றம் காப்பாற்ற வேண்டும். அனைவரின் செல்லிடப்பேசியும் வேவு பார்க்கப்பட்டுள்ளதால் நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாதா? இதுகுறித்து விசாரணை செய்ய ஆணையம் அமைக்க வேண்டும்" என்றார்.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...