அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சர்வதேச புலிகள் தினம்: கானூர் ஆர்வலர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! 0 சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதை - நடிகர் சூர்யா 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மோகன் பகவத் வருகை: மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிப்பு!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   22 , 2021  10:28:29 IST

சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகத்தை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.


ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இன்று மதுரை வருகிறார். இந்த நிலையில், மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சத்யசாய் நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதனால், அவரது வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் இருந்து அவர் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து, நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களுக்கு செல்லும் வழித்தடங்களில் உள்ள சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்திட வேண்டும். அவர் பயணிக்கும் நேரங்களில் சாலைகளில் சீரமைப்பு பணிகள் எதுவும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


மாநகராட்சி உதவி ஆணையரின் இந்த சுற்றறிக்கைக்கு சமூகவலைதளத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இதுதொடர்பாக, விளக்கமளித்த மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் உயர் பாதுகாப்பு பெற்றவர். அவரைப் போன்ற உயர் பாதுகாப்பு வி.ஐ.பி.க்கள் வரும்போது, போலீசார் அறிவுறுத்தலின்பேரில் இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பித்து அவர்கள் செல்லும் பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்த மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்படும். அவர்கள் செல்லும் பகுதியில் போக்குவரத்து தடை ஏற்படாமல் இருக்கவே இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது என்றார்.


இந்நிலையில், மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்ட சுற்றறிக்கையில், நகராட்சி உதவி ஆணையர் சண்முகம் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக”தெரிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...