அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி கடிதம்! 0 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஆயுள் கைதி உதவி! 0 ”நாங்க நினைச்சா நீங்க ஊருக்குள்ள வாழவே முடியாது…” – கொரோனாவிலும் சாதிவெறி! 0 கேட்க யாருமில்லை? – பீட்டர் அல்போன்ஸ் 0 ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் - முதல்வர் ஸ்டாலின் 0 நாந்தாம்மா மு.க.ஸ்டாலின் பேசுறேன்!... முதல்வர் நீட்டிய உதவிக்கரம்! 0 ரெம்டெசிவிர் தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு தகவல்! 0 மின் மயானங்களில் உடல்களைத் தகனம் செய்வதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க நடவடிக்கை! 0 இரு சக்கர வாகனங்களின் சாவிகளை மறைத்து வையுங்கள்- ராமதாஸ் 0 கொரோனாவிலிருந்து மீண்ட புதுவை முதல்வர் ரங்கசாமி! 0 ரெம்டெசிவர் மருந்து: நேரு உள்விளையாட்டு அரங்கம் எதிரே பொதுமக்கள் சாலை மறியல்! 0 விசிக பொருளாளர் யூசுப் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்! 0 ஒவ்வொரு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2000! 0 அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல்: 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை! 0 விசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப் கொரோனாவால் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன்!

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   29 , 2021  13:20:44 IST

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் சில கருத்துகளைத் தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். அதேபோல், அவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து அதனை தடுப்பூசி வாங்க சுகாதாரத் துறைக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மேலும், கரோனா தடுப்பூசி குறித்து வீண் வதந்திகளைப் பரப்பும் பணிகளில் ஈடுபடக் கூடாது என்றும் மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...