அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஆயுள் கைதி உதவி! 0 ”நாங்க நினைச்சா நீங்க ஊருக்குள்ள வாழவே முடியாது…” – கொரோனாவிலும் சாதிவெறி! 0 கேட்க யாருமில்லை? – பீட்டர் அல்போன்ஸ் 0 ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் - முதல்வர் ஸ்டாலின் 0 நாந்தாம்மா மு.க.ஸ்டாலின் பேசுறேன்!... முதல்வர் நீட்டிய உதவிக்கரம்! 0 ரெம்டெசிவிர் தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு தகவல்! 0 மின் மயானங்களில் உடல்களைத் தகனம் செய்வதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க நடவடிக்கை! 0 இரு சக்கர வாகனங்களின் சாவிகளை மறைத்து வையுங்கள்- ராமதாஸ் 0 கொரோனாவிலிருந்து மீண்ட புதுவை முதல்வர் ரங்கசாமி! 0 ரெம்டெசிவர் மருந்து: நேரு உள்விளையாட்டு அரங்கம் எதிரே பொதுமக்கள் சாலை மறியல்! 0 விசிக பொருளாளர் யூசுப் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்! 0 ஒவ்வொரு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2000! 0 அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல்: 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை! 0 விசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப் கொரோனாவால் மரணம் 0 அமைச்சர் மனோ தங்கராஜூக்கு கொரோனா பாதிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

திருத்தியதாக அறிவித்த கர்ணன் படக்குழு: உதயநிதி ஸ்டாலின் அதிருப்தி!

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   15 , 2021  11:19:24 IST

”கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும்'90-களின் இறுதியில்' என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன” என திமுக இளைஞர் அணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

 
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் , “கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாகக் காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் - இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனைத் திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர்.

 
படைப்பிலுள்ள பிழையை சுட்டிக்காட்டுகையில் அதை திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும்'90-களின் இறுதியில்' என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன.

 
ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...