அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சர்வதேச புலிகள் தினம்: கானூர் ஆர்வலர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! 0 சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதை - நடிகர் சூர்யா 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழக அரசு மீது எந்த விமர்சனத்தையும் வைக்க மாட்டேன் - எஸ்.வி.சேகர்

Posted : புதன்கிழமை,   ஜுலை   21 , 2021  19:55:54 IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனாவை சிறப்பாக கையாண்டு வருகிறது என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 20ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி. சேகர், திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது. எந்த விமர்சனத்தையும் 100 நாட்கள் வரை வைக்க வேண்டாம் என்று நாங்கள் எல்லாரும் இருக்கிறோம்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனா தொற்றுநோய் காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்று சமயத்தில் மக்களை காப்பாற்றுவதில் மட்டும் தான் முழு கவனத்தை செலுத்த முடியும். எல்லா துறைகளிலும் 100% கவனத்தை செலுத்த முடியாது. ஒரு சமயத்தில், ஒரு வேலை மட்டும் தான் பார்க்க முடியும், அது யாராக இருந்தாலும் சரி.


அதையும் காலையில் எழுந்தவுடனேயே விமர்சித்து கொண்டியிருந்தால் வெற்று அரசியலாக தான் இருக்கும் என கூறியுள்ளார். ஒரு உன்னத நோக்கத்துடன் செயல்படும் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசை எப்படி விமர்சனம் செய்ய முடியும். தேவையில்லாமல் விமர்சனம் செய்வது வெற்று அரசியல் என்றும் தற்போது விமர்சனம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...