அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார்!

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   27 , 2021  12:05:41 IST

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று சந்தித்துப் பேசினார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், “காலில் விழுந்து கேட்கிறேன் ஓட்டுக்கு யாரும் பணம் வாங்காதீர்கள்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டணி அமைப்பது, தொகுதிப் பங்கீடு தொடர்பாக அனைத்து கட்சிகளும் பேசத் தொடங்கிவிட்டனர்.

 

இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை இன்று காலை சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றது. சரத்குமாருடன் ஐஜேகே துணைப் பொதுச்செயலாளர் ரவிபாபுவும் சென்றார்.

 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், ”நல்லவர்கள் இணையலாம். நல்ல எண்ணம் கொண்டவர்கள் ஒன்றிணைந்தால் நன்றாக இருக்கும். கூட்டணி குறித்து கமலிடம் பேசினோம். கமலிடமிருந்து நல்ல முடிவு வரும். மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்தேன். காலில் விழுந்து கேட்கிறேன் ஓட்டு போடுவதற்கு யாரும் பணம் வாங்காதீர்கள். இதனால் எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள். பத்தாண்டுகளாக அதிமுக கூட்டணியிலிருந்தாலும் யாரும் இதுவரை பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டேன்” என்றார்.

 

ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சி ஐஜேகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் மக்கள் நீதி மய்யமும் இந்தப் புதிய கூட்டணியில் இணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...