அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஆஸ்கர் விருது பெற்ற தங்கள் நாட்டுப் பெண் இயக்குநரைப் புறக்கணித்த சீனா!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   27 , 2021  15:22:03 IST


Andhimazhai Image

2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் க்ளோயி ஸாவோ இயக்கிய ’நோமேட்லேண்ட்’ சிறந்த திரைப்படமாக தேர்வானது. சிறந்த இயக்குநருக்கான விருதையும் இவர் பெற்றார். இவரின் வெற்றியை உலக முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், ஸாவோ பிறந்த சீனவோ அவரின் வெற்றியை புறக்கணித்திருக்கிறது.

இத்தனைக்கும் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதுபெறும் முதல் வெள்ளை இனம் சாராத பெண் இவர்தான். ஆயினும் சீனா பாராமுகம் காட்டுகிறது.

 

சீன அரசு ஊடகங்கள், ஆஸ்கர் விருது அறிவிப்பு பற்றியோ, ஸாவோ பற்றிய செய்திகளையோ வெளியிடாமல் புறக்கணித்துள்ளன. திரைப்படம் பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்வது, படம் குறித்து தவறாக எழுதுவது போன்ற பல்வேறு புறக்கணிப்பு பணிகளை சீன சமூகவலைத்தளங்கள் மேற்கொண்டன. ஸாவோ ஏன்? புறக்கணிக்கப்படுகிறார் என்பதற்கான எந்த காரணங்களும் அதிகாரப்பூர்வமாக இதுவரை சொல்லப்படவில்லை. இருப்பினும் ஸாவோவின் ரசிகர்கள் அவரை சமூகவலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

எப்படி எனில் நேரடியாக அவரைப் பாராட்டாமல் மறைமுகமாகப் பாராட்டுவது, பெயரை தலைகீழாக எழுதுவது போன்ற தந்திரங்களைக் கடைப்பிடிக்கின்றனர்.

ஸாவோ ,கடந்த 2013ஆம் ஆண்டு அமெரிக்க இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சீனாவைப் பற்றிக் கூறும் போது ”எங்கும் பொய்கள் நிறைந்திருக்கின்றன” என விமர்சித்திருந்தார். இதுவே, சீனா அரசு ஊடகங்கள் ஸாவோவை புறக்கணிப்பதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

ஸாவோ விருது பெற்ற போது பேசிய உரையை அதிகம் பேர் பார்த்துள்ளனர். அவர் 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட  சீனக்கவிதை ஒன்றை மேற்கோள் காட்டிப்பேசினார். “பிறக்கும் போது அனைவரும் நல்லவர்கள்” என்ற வரியை அதிலிருந்து கூறினார்.

அமெரிக்காவில் வசிக்கும் ஸாவோ 1982-இல் பெய்ஜிங்கில் பிறந்தவர். கல்விக்காக பிரிட்டனுக்கும் பின் அமெரிக்காவுக்கும் புலம்பெயர்ந்தவர். ’நோமேட்லேண்ட்’ படம் அமெரிக்காவில் சொந்த வீடு இன்றி வேனில் அலைந்த வண்ணம் பணிபுரியும் பெண்ணின் வாழ்க்கையைப் பற்றிய படம் ஆகும். இந்த படத்தில் நடித்த நடிகை பிரான்சிஸ் மெக்டார்மண்ட் சிறந்த நடிகைக்கான விருதுக்கும் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...