அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

செங்கல்பட்டு மருத்துவமனையில் போதிய அளவு ஆக்சிஜன் உள்ளது – மாவட்ட ஆட்சியர்

Posted : புதன்கிழமை,   மே   05 , 2021  10:30:06 IST

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 சிலிண்டர்களும், 3000 லிட்டர் கொள்ளளவில் ஒரு சிலிண்டரும் உள்ளது என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



செங்கல்பட்டு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 480 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன. தினமும் 300 பேருக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புடன் வருகின்றனர். அவர்களில் தொற்று தீவிரமாக உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். மற்றவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.



மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 சிலிண்டர்களும், 3000 லிட்டர் கொள்ளளவில் ஒரு சிலிண்டரும் உள்ளன. இவை தவிர மறைமலைநகர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களிலிருந்து ஆக்சிஜன் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம்.



செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒப்பந்த முறையில் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். தகுதியுடையவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி முதல்வரை நேரடியாக அணுகி பணியில் சேரலாம். கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் ஏற்கெனவே 2 வகைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டு கரோனா தொற்று உள்ளவர்கள் எந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுகுறித்து சோதனை மேற்கொள்ளப்படுகிறது.இன்னும் கூடுதலாக திறக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்லாவரத்தில் கன்டோன்மென்ட் மருத்துவமனை கொரோனா மருத்துவமனையாக மாற்ற ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...