சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் மேற்கொண்டுவந்த போராட்டம் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத்துறை தனியார்மயமாதல், ஒப்பந்த முறையில் ஓட்டுநர்கள் நியமனம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து, போக்குவரத்து ஊழியர்கள் இன்று மாலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன் அறிவிப்பின்றி நடைபெற்ற தொழிற்சங்கங்களில் இந்த போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாயினர்.
இதனைத் தொடர்ந்து தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், போராட்டத்தை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில், “முதலமைச்சர் வெளிநாட்டில் இருந்தாலும் இங்கு என்ன நடக்கிறது என்பதை கவனித்து வருவதால், உடனடியாக அழைத்து அறிவுரை கூறியிருக்கிறார். ஒவ்வொரு தொழிற்சங்கத்திடமும் கூறியிருக்கிறேன் முதலமைச்சர் தமிழ்நாடு திரும்பியதும் பேசிமுடிவெடுக்கலாம் என. அவர்களும் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் வழக்கமான பேருந்து சேவை இருக்கும்.” என்றார்.