நாங்குநேரி கொடுமை: பெற்றோரையும் குற்றவாளியாகச் சேர்க்க காங்கிரஸ் கோரிக்கை

காங்கிரஸ் எஸ்சி அணி அறிக்கை
காங்கிரஸ் எஸ்சி அணி அறிக்கை
Published on

நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னதுரையை சக மாணவர்களே கொல்ல முயன்ற தாக்குதல் வழக்கில், குற்றவாளிகளின் பெற்றோரையும் சேர்க்கவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில பட்டியல் சமூகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

அப்பிரிவின் தலைவர் ரஞ்சன்குமார் இதுகுறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், அதிர்ச்சியையும் வேதனையையும் தெரிவித்துள்ளார்.

எல்லா துறைகளிலும் முன்னேறிய மாநிலம்மாக திகழும் தமிழ்நாட்டில் இது போன்ற சாதிய வன்மத்தோடு நடக்கும் சம்பங்கள் நம்மை மேலும் பின்னோக்கியே இழுக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர்,

குற்றவாளிகள் அனைவரும் 17 வயதே உடைய நபர்களாக இருப்பது இந்தியாவில் முன்னேறிய சமூகமாக அடையாளபடும் தமிழ் சமூகம் இன்னும் சாதிய பாகுபாட்டில் கட்டுண்டு கிடப்பதாகவே காணபடுகிறது என்றும் சாடியுள்ளார்.

” பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இப்படி கொடூரமான செயல்களை செய்யும் அளவுக்கு ஜாதி உளவியல் மேலோங்கி இருக்கிறது. 17 வயதில் ஜாதிய கொடுமைகள், கொலைகள் செய்யும் அளவுக்கு ஏற்படும் மனநிலையை உருவாக்கிய பெற்றோர்களையும் குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்க வேண்டும்.

வழக்கு முடியும் வரை குற்றவாளி களுக்கு பிணை வழங்கக் கூடாது; நெல்லை - தென்காசி உள்ளடங்கிய ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் கல்வி நிலையங்களில் உடற்கல்வி ஆசிரியர் தலைமையின் கீழ் மாணவர்களைக் கண்காணிக்க கண்காணிப்புக் குழு கடந்த 2017 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

கல்வி நிலையங்களில் நடக்கும் மாணவப் பிரச்சினைகளைக் கண்காணித்து அதனை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு அந்தக் கண்காணிப்பு குழுவுக்கு இருக்கிறது. இந்த விவகாரத்தில் சரியாகச் செயல்படாத கண்காணிப்பு குழுவை விசாரித்து மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் ரஞ்சன் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com