உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

கோயில் அர்ச்சகர் பணி நியமன அரசாணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Published on

தமிழ்நாட்டில் கோயில் அர்ச்சகர், கோயில் பணியாளர்கள் நியமனம் தொடர்பான அரசாணைக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

கோயில் அர்ச்சகர் மற்றும் கோயில் பணியாளர்கள் நியமிக்க இந்து சமய அறநிலையத்துறை கடந்த 2020 செப்டம்பரில் அரசாணை வெளியிட்டது. இதற்குத் தடைகோரி ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியது.

இந்த வழக்கானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பர்திவாலா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் அர்ச்சகர், கோயில் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடைவிதிக்க மறுத்ததோடு, இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com