மேற்குத்தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு புது வகை  வண்ணத்துப்பூச்சி!
RAMASAMYSRK

மேற்குத்தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு புது வகை வண்ணத்துப்பூச்சி!

Published on
RAMASAMYSRK

மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் என்னும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருவில்லிபுத்தூர், மேகமலைப் புலிகள் காப்பகம் உள்ள மேகமலை வனத்துறைக் கோட்டத்தில் கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் என்னும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனமாகும்.

இந்த புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனத்திற்கு மேகமலையின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது. மேகமலை என்றால் மேகம் மலை என்று பொருள்படும்.

தேனியைச் சேர்ந்த வனம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் காலேஷ் சதாசிவம், எஸ்.இராமசாமி காமையா, டாக்டர்.சி.பி.ராஜ்குமார் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து ’என்டோமான்’என்னும் அறிவியல் ஆய்விதழில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்டுள்ள வண்ணத்துப்பூச்சி இனங்களின் வகையினங்கள் 337ஆக உயர்ந்துள்ளது.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் - வனத் துறையின் செயலாளர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com