புதுக்கோட்டை மீனவர் 12 பேர் இலங்கைப் படையால் கைது - விடுவிக்க தமிழக அரசு கடிதம்!
(கோப்புப் படம்)

புதுக்கோட்டை மீனவர் 12 பேர் இலங்கைப் படையால் கைது - விடுவிக்க தமிழக அரசு கடிதம்!

Published on

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும்ம் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், 13.01.2024 அன்று இலங்கையின் நெடுந்தீவு அருகே மூன்று விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரத்தை இலங்கை அரசுடன் உரிய தூதரக வழிமுறைகள் மூலம் எடுத்துச் சென்று, இலங்கை சிறையில் தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதலமைச்சர் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com